பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2复6 தமிழ் பயிற்றும் முறை

அளிக்கும். சொல்லும்பொழுது அடிக்கடிப் புத்தகங்களைப் பார்க்கும் பழக்கத்தைத் தவிர்க்கவேண்டும். ஒவ்வொரு கதையிலும் சிறப்பாகப் பயன்படுத்தவேண்டிய சொற்களையும் சொற்ருெடர்களையும் தெரிந்து கையாளவேண்டும். ஏற்ற இடங்களில், இயல்பான குரலில், எடுத்தும் படுத்தும் நலிந்தும் கதைப்போக்கு அமையவேண்டும் ; கதையிலுள்ள நிகழ்ச்சிகள் ஒரு நாடகம்போல் குழந்தைகளின் மனக்கண்முன் தோன்றும்படி சொல்லவேண்டும். சாதா ரணக் காட்சிகளை வருணிக்கும்பொழுது நிதானமாகச் செல்லவேண்டும். அருமையான கட்டங்கள், துணிகரச் செயல்கள், திடுக்கிடும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றைச் சொல்லும்பொழுது மிகுந்த உற்சாகத்துடனும் அபிநயத்துடனும் இடத்திற்கேற்ற தொனியுடனும் உரைக்கவேண்டும் ; கதை சொல்லுதல் சொற்பொழிவுபோல் இருக்கக்கூடாது. கீழ் வகுப்புக்களில் குழந்தைகள் அறிந்த மொழிநடையில் கதையைக் கூறுதல் அவசியம். கதை சொல்லும்பொழுதே கதையின் நீதி வெளிப்படவேண்டுமேயன்றி, அதைத் தனியாக வெளிப்படையாக எடுத்துக்காட்டி வற்புறுத்தக் கூடாது. நகைச்சுவைகளைக் கூறும்பொழுது மாணுக்கர்கட்கு நன்கு துய்க்கும் வாய்ப்புக்களே அளிக்கவேண்டும் , அதற்கு ஆசிரியரும் நகைச்சுவைகளேத் துய்ப்போராக இருந்தால் மிகவும் நலம். கதைகளைச் சொல்லக் கேட்போர்களிடம் பல கதைகளைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் எழுப்பப்பெற்ருல் அதுவே கதை சொல்லும் ஆசிரியரின் வெற்றியாகும்.

கதைகளின் வகைகள் : கதைகளில் பலவகைகள் உள. இயற்கைக் கதைகள், நகைச்சுவையுள்ள வேடிக்கைக் கதைகள், மோகினிக் கதைகள், வரலாற்றுக் கதைகள், புராணக் கதைகள் ஆகிய கதைகள் அவற்றுள் சிலவகை. அவை ஒவ்வொன்றைப்பற்றியும் ஆசிரியர்கள் ஓரளவு அறிந்திருத்தல் அவசியம்.

இயற்கைக் கதைகள் ; இக் கதைகளைப் பெரும்பாலும் ஆசிரியர்கள் நன்கு அறிவர். மானிட வாழ்க்கையைத்