பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 8 தமிழ் பயிற்றும் முறை

தென்னுலிராமன் கதைகளில் வரும் பல நிகழ்ச்சிகள் அவற்றை நினைக்கும்பொழுதே நம்மை மகிழ்வடையச் செய்கின்றன. நகைச்சுவைக் கதைகளின் முக்கிய நோக்கம் வேடிக்கையே; அவற்றிலுள்ள நீதிப் பண்பு இரண்டாம்படியே. மகிழ்நன் எழுதியுள்ள கடலும் கடலையும் , ‘யதார்த்தவாதி லோக விரோதி', வண்ணுரப் பெரியாண்டி : போன்ற கட்டுரைகளிலுள்ள நகைச்சுவை இலக்கியமணம் கமழச் செய்து அவற்றை ஓர் உயர்ந்த இலக்கிய நிலைக்கு உயர்த்தி விடுகின்றது. நகைச்சுவை இன்றேல் வாழ்வு சுவைக்காது என்று நாட்டின் தந்தை காந்தியடிகளே ஓரிடத்தில் சொல்லியிருக்கின் ருர். நகைமுகம் கொண்டு வாழும் வாழ்வே நாகரிக வாழ்வு. குழந்தைகளின் வாழ்க்கையில் நகைத்து நிற்கின்ற நிலேயே அடிப்படையாக அமையுமாறு அவர்களைப் பழக்குதல் வேண்டும். நகைச்சுவைக் கதைகள் இதற்குத் துணையாக நிற்கின்றன.

மோகினிக் கதைகள் : இவை குழந்தைகளிடம் இலக்கியப் பண்பாட்டை வளர்க்கும் பேராற்றல் வாய்ந்தவை. குழந்தைகளின் உள்ளக் கிளர்ச்சிக்கு இவை முக்கியமானவை. குழந்தைகளைப் பாவனை உலகிற்குக் கொண்டு. செல்வதற்கு இவை துணையாக உள்ளன. எத்தனையோ குழந்தைகளின் உள்ளங்களைக் களிப்பித்துக்கொண்டு இருப்பதால் இன்று உலகிடையே பல மொழிகளிலும் இத்தகைய மோகினிக் கதைகள் சாவா இலக்கியங்களாக, குழந்தைகளின் பரம்பரைச் சொத்துக்களாக, இருந்து வருகின்றன. இக் கதைகளைக் குழந்தை உலகம் ஆர்வத்துடன் வரவேற்கின்றது. கற்பனைகளின் மூலம் உணர்த்தப்பெறும் பல உண்மைகளைக் குழந்தைகள் இக்கதைகளின் வாயிலாக உணர்கின்றனர். வாழ்க்கையின் பல உண்மைகள், அன்ருட வாழ்வில் நேரிடும் அனுபவங்களின் பொதுத் தன்மைகள் முதலியவற்றைக் குழந்தைகள் அறிகின்றனர். மோகினிக் கதைகளைப் பள்ளி வாழ்வின் தொடக்க நிலையில் சொல்லாவிட்டால், குழந்தைகள் தம் பிற்கால வாழ்வில் முதிர்ந்த இலக்கியங்களின் தன்மைகளைச்