பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 தமிழ் பயிற்றும் முறை

இன்றைய வாழ்வுடன் இணேத்துக் காட்டுவதற்கு அவ்வரலாற்றுக் கதைகள் பெருந்துணை புரிபவை. முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும் ஈந்த பண்டைய வள்ளல்களின் வாழ்வையும், தாம் குடியிருந்த வீட்டையே காங்கிரஸ் அலுவலகத்திற்கும் மகளிர்க் கல்லூரிக்கும் ஈந்த இக்கால வள்ளல்களின் வாழ்வையும் இணைத்துக் காட்டும். பொழுது மாணுக்கர்கள் வாழ்க்கையின் உண்மைகளையும், கொடை மடத்தையும் ஒரளவு தெளிவாக உணர்வர். சிவாஜியின் துணிகரச் செயல்களையும் கட்ட பொம்மனின் வீரச் செயல்களையும் முறையே விநாயக தாமோதர சாவர்க்காரின் துணிகரச் செயல்களோடும் நேதாஜியின் வீரச் செயல்களோடும் ஒப்பிட்டுக் கற்கும்பொழுது உண்மையிலேயே அவை இளம் மாணு க்கர்களின் உள்ளங்களில் நாட்டுப் பற்றுக் கனலேத் தோற்றுவிக்கும். இவற்றின் மூலம் நாட்டுப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வமும் எழும்.

புராணக் கதைகள் : இவை நம் நாட்டின் சிந்தனேக். கருவூலங்கள். வளர்ந்தவர்கட்கும் வாழ்க்கையில் ஈடுபட்டவர்கட்கும் வழிகாட்டிகளாக உதவுபவை. நம் பண்டைப் பெரியார்கள் எத்தனையோ உண்மைகளைக் கதைகளின் மூலம் விளக்கியுள்ளனர். இக்கால மாணுக்கர்களுக்கு அவற்றைக் கற்பிக்கும்பொழுது அறிவியல் மனப்பான்மையில் கதையின் போக்கை ஆராயவேண்டும். கதைகளில் பொதிந்துள்ள உண்மைப் பொருள்களேத் தெளிவாக எடுத்துக் காட்டினுல் கட்டாயம் அவைகளை மாணுக்கர்கள் விரும்புவர். இராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற இதிகாசங்களில் காணப்பெறும் நிகழ்ச்சிகளும், அங்குள்ள இதிகாச மாந்தர்களின் வரலாறுகளும் மானிட வாழ்க்கையை வளமுற அமைத்துக் கொண்டு வாழ என்றும் இணையற்ற வழிகாட்டிகளாக இருப்பவை. இராமன், அரிச்சந்திரன், நளன், தருமன் போன்றவர்களின் வரலாறுகள் எத்தனையோ அறிஞர்களின் வாழ்வைச் செம்மைப்படுத்தி யுள்ளன.

  • முறையே பண்டித மோதிலால் நேரு, டாக்டர் அழகப்பச் செட்டியார் ஆகியோர்.