பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிப் பயிற்சி 忍2廷

கதைகளின் பண்டைப் பெருமை : பண்டிருந்தே கதைகள் மானிட வாழ்க்கையில் ஒரு சிறந்த இடத்தைப்பெற்றுள்ளன. எல்லாப் பருவத்திலும் கதைகள் மனிதனின் இதயத்தைக் கொள்ளே கொள்ளும் தன்மையைப் பெற்றிருந்துள்ளன. நமது நாட்டில் கதை சொல்லுவது ஒரு கலையாகவே மதிக்கப்பெற்று வந்திருக்கின்றது. சிறுகுழந்தையாக இருந்தபொழுது சிவாஜி அன்னேயின் மடியிலிருந்துகொண்டே பல கதைகளைக் கேட்டதாக வரலாற்றுமூலம் அறிகின் ருேம். திருவிழாக் காலங்களிலும் பிறசமயங்களிலும் கோயில்களிலும் மடங்களிலும் புராணச் சொற்பொழிவுகள் செய்யப். பெற்று வருவதை இன்றும் காணலாம். கதா காலட்சேபங்கள் செய்வது இன்றும் ஒரு சிறந்த கலையாகப் போற்றப்படுகின்றது’. பாமர மக்களுக்கு உயர்ந்த சமய உண்மைகளையும், வாழ்க்கைத் தத்துவங்களேயும் கற்பிப்பதற்கு இக்கதைகள் பெரிதும் உதவுகின்றன. எத்தனையோ பேர் இக்கதைகளைக் கேட்டு உள்ளத்தெளிவு அடைந்துள்ளனர் ; அடைந்தும் வருகின்றனர். இதிகாசத்திலும் பலர் இவ்வாறு தெளிவு பெற்றதைக் காண்கின்ருேம், இராமாயணத்தில் குசனும் லவனும் வால்மீகரிடமிருந்து கதைகள் மூலம் கல்வி பெற்றதையும், விசுவாமித்திரர்மூலம் இராம இலக்குமணர் பல கதைகளைக் கேட்டதையும், பாண்டவர்கள் பன்னிரண்டு' ஆண்டு வனத்தில் வாழ்ந்தபொழுது பல முனிவர்கள் அவர்கட்குப் பல உண்மைகளைக் கதைகளின் மூலம் உணர்த்தியதையும் நாம் அறிகின்ருேம். எனவே, மக்களுக்கு இயல்பாக உள்ள கதை ஆர்வத்தை சிறு குழந்தைகளின் மொழிப் பயிற்சியில் திருப்பிவிட்டால் நிறைந்த பயனே" அடையலாம் என்பதை மொழியாசிரியர்கள் அறியவேண்டும்.

  • அண்மைக் காலத்தில் கதா காலட்சேபம் செய்வதில் பயிற்சி தருவதற்கென ஒரு பள்ளியையும் தமிழக அரசு தஞ்சையில் தொடங்கியுள்ளது. திருமலை-திருப்பதி தேவஸ் தான இசைக் கல்லூரியிலும் இத்தகைய பயிற்சி அளிப்பு தற்கு வசதிகள் செய்யப்பெற்றுள்ளன.