பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் பயிற்றும் முறை

4. கடிப்பு

நடிப்பதையும் வாய்மொழிப் பயிற்சிக்கு நன்கு பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு நடிப்பதில் ஆவல் அதிகம். நடித்தல் அவர்களுக்கு இயற்கையாக அமைந்துள்ளது. நடிப்பிற்கேற்ற சிறு பாடல்களேயும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்கக் கற்பிக்கலாம். குழந்தைகள் நடிக்க வேண்டிய பகுதியின் கருத்தையுணர்ந்து நடித்தால் நல்ல பயன் விளேயும். எனவே, சிறு குழந்தைகளின் பட்டறி. விற்கு அப்பாற்பட்டவற்றை நடிக்கும் பகுதிகளாகத் தேர்ந்தெடுத்தல் கூடாது. சிறு நிகழ்ச்சிகள், தொழில்கள், பிராணிகள், பிரயாணங்கள் ஆகியவற்றை நடிக்கச்செய்யலாம். அடியிற் கண்ட பாடலேத் தொடக்கநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணுக்கர்களைக்கொண்டு நடிக்கச் செய்யலாம். இந்த ஆட்டத்தை முதலில் ஆசிரியர் மாணுக்கர்களுக்கு விளக்கியபின் ஆட்டத்தைத் தொடங்க. வேண்டும். முதலில் வகுப்பிலுள்ள மானுக்கர்களே ஆறு சிறு குழுக்களாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். ஆறு குழுக்களுக்கும் தலைவகை ஒருவனத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

எல்லோரும்: முத்து செய்த பெட்டி

இதுதான், இதுதான்.

தலைவன் : இந்த ரொட்டி தெரியுமா ?

முதற்குழு : முத்து செய்த பெட்டியில்

வைத்த நல்ல ரொட்டியும் இதுதான், இதுதான்.

தலைவன் : இந்த எலி தெரியுமா ?

இரண்டாம் குழு : முத்து செய்த பெட்டியில்

வைத்த நல்ல ரொட்டியைத்