பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிப் பயிற்சி 225

கொப்புளித்து நிற்கும். புதிய சொற்களையும், சொற்ருெடர். களேயும் தாமாகவே அமைத்துப் பேசும் வாய்ப்புக்கள் அவர்கட்குக் கிட்டும். நடிக்கும்பொழுது அவர்கள் முழு மன ஆற்றலைப் பயன்படுத்திக் குரல்மாற்றம், குரலின் ஏற்றத் தாழ்வுகள், இடத்திற்கேற்ற சைகைகள் முதலியவற்றை மேற்கொள்வர். அவ்வாறு செய்வதில் ஆசிரியர் அவ்வப்பொழுது அவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்யலாம்.

எல்லாக் கதைகளும் நடிக்கும் முறையில் இரா நடித்தற்குரிய நிகழ்ச்சிகளைக் கொண்ட கதைகளே ஆசிரியர் இரண்டு மூன்று காட்சிகளாக வகுத்து நாடக முறையில் அமைத்துக்கொடுத்து அவற்றை நடிக்கும்படி செய்யலாம். இடத்திற்கேற்ருற்போல் ஒரு சில பாட்டுக்களையும் இடை இடையே சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளின் விருப்பப்படி நடிக்கப்பெறவேண்டிய பகுதிகளைப் பிரித்துக்கொடுக்க வேண்டும். இந் நடிப்புக்களில் அதிக அழகான ஆடைகளையும் ஒப்பனேகளையும் எதிர்பார்த்தலாகாது. பிள்ளைகளின் மனப்போக்கை யொட்டி நடிக்கச் செய்வதே கீழ் வகுப்புக்களில் முக்கியமானது. சிறு குழந்தைகளே எளிதாகப் பாவனை உலகத்திற்குக் (Make-believe world) கூட்டிச் செல்ல முடியும். அவர்களும் எதையும் கற்பனையில் நிறைவு செய்து கொள்வர். பள்ளி ஆண்டு விழா, பெற்ருேர் நாள் போன்ற சிறப்பான நாட்களில் மட்டும் உரிய உடைகளுடனும் ஒப்பனேகளுடனும் நடிக்கச் செய்தால் போது

மானது.

5. படங்கள்

வாய்மொழிப் பயிற்சியை அளிப்பதற்குப் படங்கள் பெரிதும் துணையாக உள்ளன. படங்களைப் பார்த்து மகிழ்வதில் இளஞ்சிருர்களுக்கு ஆர்வம் அதிகம். எல்லா நிலையிலும் படங்கள் மொழி கற்பித்தலுக்குப் பயன்படும். படங்களே உற்று நோக்குவதன் மூலம் கூர்ந்து நோக்குந்திறன், கற்பனை ஆற்றல், ஓவியக்கலையில் ஆர்வம்,

த- 16