பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 தமிழ் பயிற்றும் முறை

அழகுணர்ச்சி ஆகியவை ஏற்படும். படங்களில் காணும் செய்திகள் மனத்தில் நன்கு பதியும். இளஞ்சிருர்களின் மனம் எல்லாச் செய்திகளேயும் சொற்களின் மூலம் ஏற்றுக் கொள்வதில் நன்கு பயிற்சி பெற்றிருக்காது. சொற்களைக்கொண்டே கற்பனையை வளர்த்துப் பொருள்களைப் புரிந்து கொள்ளுதல் கடினம். வேண்டுமானல் ஒரு சிலர் புரிந்து கொள்ளக்கூடும். பலர் கட்டாயம் புரிந்து கொள்ள முடியாது. சொற்களைக் கொண்டு சொற்களை விளக்குவதைவிட அச்சொற்கள் குறிக்கும் படங்களேக்கொண்டு அவற்றை விளக்கினுல் குழந்தைகள் நல்ல விளக்கம் பெறுவர். ஒரு சிலர் படங்களைக் காட்டுவதைவிட அப் படங்கள் குறிக்கும் பொருள்களேயே காட்டிவிடலாமே என்று கூறலாம். உண்மைதான் ; ஆனல் எல்லாப் பொருள்களேயும் வகுப்பறைக்குக் கொண்டு வருதல் என்பது இயலாத செயல். எல்லாப் பொருள்களையும் கொண்டுவரவும் தேவையில்லை. பெரும்பான்மையான குழந்தைகள் அடிக்கடி பார்க்காதவற்றைப் பார்ப்பதற்குக் குழந்தைகளே அப்பொருள்கள் உள்ள இடத்திற்கு அழைத்துச் சென்று விளக்கலாம். எடுத்துக்காட்டாக ஒரு புகைவண்டிப் பொறியை (Engine) இவ்வாறு விளக்கலாம். ஆல்ை, ஒரு குடிசையை விளக்க மாளுக்கர்களை வெளியே கூட்டிச் செல்லவேண்டியதில்லை. குடிசைப் படம் இதற்குப் போதுமானது. மானுக்கர்கள் தாம் அடிக்கடி பார்த்த குடிசையைப்பற்றிப் படத்தைக் கொண்டே நல்ல விளக்கம் பெறமுடியும்.

பயன் படுத்தும் முறை : படங்களே இவ்வாறு பயன் படுத்தலாம் : படங்களில் காணும் செய்திகளைப்பற்றிக் குழந்தைகளே வினவத் தூண்டலாம். படங்களின் மூலம் கதைகளை விளக்கலாம். படங்களே வருணித்துப் பேசலாம். படங்களின் மூலம் படிப்பு கற்பிக்கலாம் ; படங்களைக்கொண்டு சில பாடங்களையும் விளக்கக்கூடும். படங்களில் காணப்படும் பெயர்களைக் கற்பித்து குழந்தைகளின் சொற்களஞ்சியத்தைப் பெருக்கலாம். இவ்வாறு கற்பித்தலில் படங்கள் எத்தனையோ கூறுகளில் துணையாக உள்ளன.