வாய்மொழிப் பயிற்சி 337
படங்களைப்பற்றி உரையாடலாம். மாளுக்கர்கள் படத்தைப் பார்த்துப் படிக்கும்பொழுது முதலில் சொற்கவளாகவும் பிறகு சொற்ருெடர்களாகவும் கடைசியில் படத்தி. லுள்ள செய்திகளை ஒரு கதையாகவும்-இம் மாதிரி படிப்படியாகச் சொல்லப் பழக்கலாம். கதை கேட்பதுபோல படங்களேக் காண்பதிலும் குழந்தைகளுக்கு விருப்பம் உண்டு ; ஆகையால் அச்சம், கூச்சம் ஆகியவற்றை நீக்கிப் பேசப் பழகுவதற்குப் படங்கள் நன்கு பயன்படும். முதல் இரண்டு வகுப்புக்களுக்கு இம்மாதிரியான பயிற்சி. களேத் தரலாம்.
பலவகைப் படங்கள் : இக்காலத்தில் வண்ணந்தீட்டப்பெற்ற படங்களும் தீட்டப்பெருத படங்களும் ஏராளமாக அச்சிடப்பெற்று மலிவாகக் கிடைக்கின்றன. அவற்றைத் தாய்மொழியாசிரியர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாடப்புத்தகங்களைப் படிக்கத் தொடங்குவதற்குமுன் சிறு குழந்தைகளுக்கென்றே ஆயத்தம் செய்து வெளியிடப் பெற்றுள்ள படப்புத்தகங்களே வாங்கிக் கொடுத்து அவைகளைப் பார்த்து மகிழச் செய்தால் இளஞ்சிருங்களுக்குப் படிப்பில் சுவை உண்டாகும். இப் படப் புத்தகங்கள் பாடப் புத்தகங்களுக்கு அடிப்படையாக அமையும். படங்களும் சொற்களும் அச்சிட்ட அட்டைகள் புதுமுறைப்படி படிப்பு கற்பிப்பதில் பெரிதும் பயன்படுகின்றன. இன்று 'அம்பிகா வாசகம்’ போன்ற பாடப் புத்தகங்களில் அழகான வண்ணப் படங்கள் சேர்க்கப் பெற்றுள்ளன. அத்தகைய படங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது வீண் பொழுதுபோக்கு என்று ஆசிரியர்கள் சிலரும் பெற்ருேர்கள் பலரும் எண்ணுகின்றனர். அது தவருன கருத்தாகும். அப் படங்களைப்பற்றி உரையாடிப் பாடத்திற்கு அடிப்படையாக அவைகளைப் பயன்படுத்தலாம். பாடத்தில் வரும் கடின
- இம் முறையில் தமிழக அரசினரும் வெளியிட்டுள்ளமை பாராட்டத் தக்கது.