பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 தமிழ் பயிற்றும் முறை

சொற்களையும் செய்திகளையும் விளக்க அவை பயன்படும். கண்ணில்ை காணும் படங்கள் கருத்துக்களே மனத்தில் ஆழப் பதிக்கத் துணைசெய்யும். பெரிய இயற்கைப் பொருட்படங்கள், கதைப் படங்கள், தொழில்முறை விளக்கப் படங்கள் ஆகியவை தனியாக அச்சிடப்பெற்று விஜலக்குக் கிடைக்கின்றன. அவைகளே மொழிக் கட்டுரைப் பாடங்களில் பயன்படுத்தலாம். புகைவண்டி நிலையம், படக்காட்சிக் கொட்ட கைகள், கடைவீதி ஆகிய இடங்களில் காணப்பெறும் விளம்பரப் படங்களைக் கவனிக்கவும், அப்படங்களில் அச்சிட்டுள்ளனவற்றைப் படித்து வரவும் குழந்தைகளைத் தூண்டலாம். செய்தித்தாள்களிலும் இதர வெளியீடுகளிலும் காணப்பெறும் படங்களைக் கத்தரித்து படத்தொகுப்பொட்டிகளில் (Picture album) சேகரித்து வைத்திருந்தால் அவற்றை மொழி கற்பித் தலில் பயன்படுத்தலாம். இவற்றைத் தவிர புராணக் கதைகளே விளக்கவும், தெய்வ பக்தியை ஊட்டவும், அழகுணர்ச்சிகளை எழுப்பவும்வல்ல இரவிவர்மா படங்கள் போன்ற ஓவியச் சிறப்பு வாய்ந்த படங்கள் பள்ளியில் இருக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. மேற்கூறிய பலவகைப் படங்களையும் வகுப்பறைகளில் சுவரில் தொங்க விட்டு வைக்கலாம். அவைகளே அதிக உயரத்தில் இராமல் குழந்தைகள் பார்த்துப் படிக்கக்கூடிய உயரத்தில் தொங்க விடவேண்டும். வாரத்துக்கு வாரம் அவை இடம் மாறித் தொங்கவிடப்பெற்ருல் குழந்தைகள் அவற்றைக் கூர்ந்து. நோக்க வாய்ப்புக்கள் உண்டாகும்.

6. சிறு சொற்பொழிவுகள்

தொடக்க நிலைப் பள்ளிகளில் மாணுக்கர்கள் அவர்களறிந்த பொருள்களைப்பற்றி நன்ருகவும் தெளிவாகவும் உரையாடலில் ஆற்றல் கைவரப்பெற்றிருப்பதால் அவர்கள் நடுநிலைப்பள்ளி வகுப்புக்களுக்கு வரும்பொழுது அவர்களறிந்த பொருளில் தொடர்ச்சியாகப் பேசுவதில் பயிற்சிகள் தரலாம். கால்டுவெல் குக் என்பவர் இவ்வாறு