பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிப் பயிற்சி 28 1

7. கலந்து ஆய்தல்

கலந்து ஆய்தலேயும் (Discussion) வாய்மொழிப் பயிற்சிக்கு நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம் செயல்திட்ட முறையில் இதற்குப் பலவாய்ப்புக்கள் கிடைக்கும். தவிர, ஏதாவது ஒரு சுற்றுலாவிற்கு (Excursion) ஆயத்தம் செய்யும்பொழுது செல்லவேண்டிய இடங்கள், ஆங்காங்கு தங்கும் வசதிகள், உணவு முறைகள், பிரயாண வசதிகள்: பல இடங்களிலும் பார்க்கவேண்டிய பொருள்கள் முதலியவற்றைப்பற்றி ஆராய்ந்து தெளியலாம். பள்ளி ஆண்டு விழா, விளேயாட்டுப் போட்டி, இலக்கியக் கழக ஆண்டு விழா, பெரியோர்களின் திருநாட்களைக் கொண்டாடுதல் ஆகியவற்றை எவ்வாறு சிறப்புற நடத்தலாம் என்பதைப்பற்றி ஆராயலாம். வகுப்புக் கையெழுத்து மாத இதழ், பள்ளி ஆண்டுமலர் ஆகியவற்றை எவ்வாறு வெளியிடுவது என்பதுபற்றி ஆராயலாம். இவற்றைத் தவிர வகுப்பிலேயே கலந்து ஆய்தலுக்குப் பல வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏதாவது ஒரு பெரிய பாடப்பகுதியைக் கற்பித்து முடிந்ததும் மாணுக்கர்கள் சரியாக விளக்கம் பெருத இடங்களே விளக்குமாறு ஆசிரியரை வினவலாம். இப்பொழுது ஆசிரியர் விளக்கம் பெற்ற ஒருசில மாணுக்கர்களே அவற்றிற்கு விளக்கம் தருமாறு ஏவலாம். அவற்றிற்குப் புதிய கருத்துக்களைத் தரமுடிந்தால் தருமாறும் தூண்டலாம். எல்லாப் பாடங்களிலும் (Subjects) இவ்வித வாய்மொழிப் பயிற்சிக்கு இடம் உண்டு. பிற பாடங்களே க் கற்பிக்கும்பொழுதும், மொழியுணர்ச்சியுடன் பணியாற்ற வேண்டும். பள்ளிக்கே பொதுவாக உள்ள சில பிரச்சினேகளைக் குழு ஆய்வாக (Panel discussion) நடத்தலாம். குழு ஆய்வு என்பது ஒரு குழு ஆராயும் செய்திகளேப் பலர் அறியுமாறு நடத்துவதாகும். எடுத்துக்காட்டாக, பள்ளி இலக்கியக் கழக ஆண்டு விழா நடத்துவதுபற்றி இவ்வாறு ஆராயப்பெறும் : பள்ளி மாணுக்கரின் அமைச்ச. ரவை (School cabinet) பள்ளிப் பொது மண்டப மேடையில் வந்து கூடும். பள்ளி மாணுக்கர்கள் யாவரும் வகுப்பு