பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிப் பயிற்சி

9. சொற்பொழிவுகள்

பல பொருள் களைக் குறித்து நீண்ட சொற்பொழிவுகள் ஆற்றுவதாலும் வாய்மொழிப் பயிற்சியை நன்கு பெற முடிகின்றது. ஒரு பொருளேக்குறித்து தொடர்ந்தாற்போல் பேசுவதற்குப் பொருளறிவும் பட்டறிவும் மொழியறிவும் மிகவும் அவசியம், கீழ்வகுப்பு மாளுக்கர்களிடம் இவற்றைக் காண்பது அரிது. உயர்நிலைப் பள்ளி மாணுக்கர்கட்கும் கல்லூரி மானுக்கர்கட்கும் மட்டிலுந்தான் நீண்ட Ġuċ#âră şsir (Long speeches) 5Tjöpo©u.

இறுதியாகக் கூறப்பெற்ற சொற்போர்களையும் சொற்பொழிவுகளையும் பள்ளி மாணுக்கர் இலக்கியக் கழகத்தின் மூலமும் கிட்டும்படிச் செய்யலாம். எனவே, இலக்கியக் கழகங்கள் மொழிப் பயிற்சிக்குப் பெரிதும் துணையாக இருப்பதை நாம் அறிகின்ருேம். ஆகவே, இத்தகைய கழகங்களைப்பற்றி ஈண்டு ஒரு சிறிது நோக்குவோம்.

மாளுக்கர் இலக்கியக் கழகங்கள் : தாய்மொழிக்கு முதலிடம் அளிக்கப்பெற்ற பிறகு பள்ளி வாழ்க்கையில் ஒரு புதிய உயிர் நாடியைக் காணலாம். மக்களாட்சி ஏற்பட்ட பிறகு எங்கும் அரசியல் வாதிகளும் பிறரும் தாய்மொழியில் பேசுவதைக் கேட்கும் மாணுக்கர்கள் தாமும் அவ்வாறு பேசிப் பழகவேண்டும் என்று எண்ணுதல் இயற்கை. தாய்மொழியில் பல செய்தித் தாள்களும் பருவ வெளியீடுகளும் (Periodicals) அதிக எண்ணிக்கையில் தோன்றியுள்ளதால் அவைகளைப் படித்துப் பல செய்திகளே அறிந்து கொண்ட பிறகு அவைகளேப்பற்றிப் பேசவேண்டும் என்ற துடிப்புமானக்கர்களிடம் அதிகமாகத் தோன்றுவதை ஆசிரியர்கள் அறிவர். இத்துடிப்புக் கேற்ற வாய்ப்புக்களையும் மேடையையும் பள்ளிகளில் மாணுக்கர் இலக்கியக் கழகமும் ஏனேய கழகங்களும் அளிக்கின்றன. சாதாரணமாக இன்று பள்ளிகளில் அறிவியல் கழகம், சமூக இயல் கழகம், கணிதக் கழகம் போன்ற பல்வேறு கழகங்கள் தோன்றிக் கொண்டு வருவதைக் காணலாம்.