பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23.4 தமிழ் பயிற்றும் முறை

உயர்நிலைப் பள்ளிகளில் பெரும்பாலும் இக்கழகங்களின் நடைமுறைகள் யாவும் தமிழில்தான் நடைபெற்று வருகின்றன. பெரும்பான்மையான மாணுக்கர்கள் தமிழில்தான் பேசுகின்றனர். மாளுக்கர்கள் தமது கருத்துக்களைப் பலர்க்குத் தெரிவிக்கவும், பல பொருள்களேப்பற்றி ஆராயவும், சொற்போர் புரியவும் இக்கழகங்கள் இடம் அளிக்கின்றன. தாய்மொழியாசிரியர்களும் பிறபாட ஆசிரியர்களும் ஒத்துழைத்தால் இக்கழகங்களின் வாயிலாக மாணுக்கர்களிடம் நல்ல தாய்மொழியறிவை வளர்க்கலாம். இக் கழகங்களில் பேசியும் வெளியார்களே வரவழைத்துப் பேசச் செய்தும் மாணுக்கர்களுக்குப் பேசும் முறைகளைக் காட்டலாம். எப்பொழுது பேசிலுைம் எப்பொருளைப்பற்றிப் பேசினலும் நல்ல நடையில் பிழைகளின்றிப் பேச வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும். நடுநிலை வகுப்பு மானுக்கர்களும் உயர்நிலை வகுப்பு மாளுக்கர்களும் மட்டிலுந்தான் சாதாரணமாக இக் கழகங்களின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுவர். முதலில் பேசுபவர்களிடம் அவைக் கூச்சம், உடல் நடுக்கம், தடுமாற்றப் பேச்சு ஆகிய கூறுகளில் மட்டிலும் கவனத்தைச் செலுத்தி நாளடைவில் கருத்தோட்டம், செய்திகளைக் கோவைப் படுத்துதல், தெளிவான பேச்சு, நல்ல உச்சரிப்பு, இனிய எளிய நடை முதலிய கூறுகளில் கவனத்தைச் செலுத்தலாம். பேச்சுக்களிலேயே இத்தகைய குறைகளே நீக்கி விட்டால், அவர்கள் எழுதும்பொழுது பிழைகள் குறையும். பேச்சுத் திருத்தம் எழுத்துத் திருத்தத்தின் அடிப்படை என்ற உண்மையை ஆசிரியர்கள் அறியவேண்டும்,

இக்கழகங்களில் பல்வேறு பொருள்களைப்பற்றிப் பேசவாய்ப்புக்கள் அளிக்கலாம். நான் கண்ட கம்பன் ', ' நான் கண்ட வள்ளுவன் ’, ‘ என் மனத்தைக் கவர்ந்த புத்தகம்’, நான் சென்ற முக்கிய இடம் , காப்பியப் பெண்மணிகள்’, *காப்பியத் தலைவர்கள் என்ற பேச்சு வரிசையில் பேச்சுக்களே அமைத்துப் பேசச் செய்யலாம். அறிவியல் கழகத்தில் * மின்சாரத்தின் வளர்ச்சி, வானவூர்தியின் வரலாறு',