பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிப் பயிற்சி 37"

படக் கூறல், வெற்றெனத் தொடுத்தல், சென்று தேய்ந்திறுதல், மற்றென்று விரித்தல் முதலிய குற்றங்களே நீக்கி, சுருங்கச் சொல்லல், விளங்கவைத்தல், நவின்ருேர்க்கினிமை, ஆழ முடைத்தாதல் முதலிய இலக்கண நூலார் கூறும் அழகுகளே அமைத்துப் பேசினுல் பேச்சில் கருத்தொழுங்கு அமையும். இனிய உளவாக இன்கு த கூறலால் நேரிடும் விளைவுகளை ஒர்ந்து விநயமாய் விளம்பி வெற்றி காணும் பண்போடு பேசவேண்டும். இவ்வாறு எளிய, இனிய, தூய நடையில் இலக்கணப் பிழையின்றி துடிப்பும் ஆற்றலும் ததும்பப் பேசில்ை கேட்டார் பிணிப்பக் கேளாதாரும் வேட்கும் முறையில் பேச்சு அமையும்.

திருத்தமற்ற பேச்சின் குறைகளைக் களையும் முறைகள் : பள்ளிக்கு வரும் இளம் மாணுக்கர்களின் பேச்சில் பல விதமான குறைகளிருக்கும். அவற்றை ஆசிரியர்கள் தொடக்கத்திலிருந்தே களைவதற்கு முனேய வேண்டும். இதற்கு ஆசிரியர் சில முறைகளே மேற்கொள்ளலாம்.

குழந்தைகளின் பேச்சு திருத்தமாகவும் தெளிவாகவும் அமைவதற்கு முதல் துணை ஆசிரியரது பேச்சா கும். இளஞ்சிருச்கள் போலச்செய்தலால்தான் (Initation) அதிகம் கற்கின்றனர் என்பது உளவியல் காட்டும் உண்மையாகும். எனவே, ஆசிரியரது பேச்சு தெளிவாகவும் திருத்தமாகவும் இருக்கவேண்டும். முதன்முதலாக ஆசிரியர் தம்மிடம் வரும் குழந்தைகளிடம் தோழமை உண்டாக்கிக் கொள்வதற்குக் கொச்சை மொழியைக் கையாண்டாலும் விரைவில் அதை நீக்கிவிட்டு, தாம் அவர்கட்கு வழிகாட்டி என்ற எண்ணத்துடன் நல்ல முறையில் பேசத் துணிய வேண்டும். வீட்டில் நல்ல பேச்சுக்களைக் கேட்க வாய்ப். பில்லாத குழந்தைகளுக்கு ஆசிரியரின் பேச்சுதான் சிறந்த வழிகாட்டியாக அமையும். எனவே, ஆசிரியரின் பேச்சு மாணுக்கர் பின்பற்றுவதற்கு ஏற்றதோர் எடுத்துக்காட்டாக அமையவேண்டும். அவரது பேச்சு திருந்திய பேச்சின் தகுதிகளைக்கொண்டு அமையவேண்டும்.