பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிப் பயிற்சி 3.89.

வும் பேசாத குழத்தைகளிடம்தான் சொல்லின் இறுதியை விழுங்குதல், சிலவற்றை இசையாது விடுத்தல் போன்ற குறைகள் காணப்படும். தெற்றுவாய் (Stuttering) அச்சத்தினுல்தான் விளேகின்றது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். வகுப்பில் குழந்தைகள் ஒருவரோடொருவர் சுயேச்சையாகப் பழகவும், ஆசிரியர்களுடன் துணிவாகப் பழகி விளுக்களை விடுக்கவும் வாய்ப்புக்கள் அளிக்கப்பெறுதல் வேண்டும். வகுப்பில் குழந்தைகளுக்கு வாய்ப்பூட்டு போடக் கூடாது. கூச்சத்தினுல் பேசத் தயங்கும் குழந்தைகளைத் துணிவாகப் பேசத் துண்டவேண்டும்.

பெரும்பாலும் மானுக்கர்களிடம் ல, ழ, ள | ர , ற ; ந, ண, ன ஆகிய எழுத்துக்களைக் கொண்ட சொற்களே உச்சரிப்பதில்தான் தவறுகள் ஏற்படும். அவற்றை நாநெகிழ் பயிற்சிகளைக் கொடுத்துப் போக்கலாம். நாவின் நுனி மேலும் கீழும் அசையுமாறுள்ள ஒலிகளைப் பன்முறை உச்சரிக்கச் செய்வதால் நாக்கு திருந்தும்.

ல,ல,ல,ல,லா; லி,லி,லி,லி,வீ; லெ,லெ,லெ,லெ,லே; ழ.ழ.ழ.ழ,ழா ழி.ழி.ழி.ழி.ழி ழெ,ழெ,ழெ,ழெ,ழே: ள,ன,ள,ள,ளா; எளி,ளி,ளி,ளி,ளி ளெ,ளெ,ளெ,ளெ, ளே: ர,ர,ர,ர,ரா, ரி,ரி,ரி,ரி,ரீ, ரெ, ரெ, ரெ, ரெ, ரே; ற.ற, ற, ற,ரு றி,றி,றி,றி,மீ. றெ,றெ,றெ,றெ,றே: ந,ந, ந, ந, நா. நி.நி.நி.நி.நீ; நெ:நெ,நெ,நெ,நே: ன,ன,ன,ன,ளு; ரிை,னி,னி,னி,னி: னெ,னெ,னெ,னெ,

(னே; ண,ன,ன,ன,ளு, ண,ணி,ணி,ணி,ணி; ணெ,ணெ,ணெ, (ணெ,னே;

என்ற முறையில் அரிய ஒலிகளைப் பன்முறை பயின்ருல் நாக்கு திருந்தும்.

நாக்கு சரியாகப் பிறழ்வதற் கேற்ற பயிற்சிகளையும்

தரலாம். ஒத்த ஓசைகள் பயிலும் சொற்களே அமைத்துப் பன்முறைப் பயிற்சி தந்தால் நாக்கு திருந்தும்.