பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 தமிழ் பயிற்றும் முறை

' கடலிலே மரவுரல் உருளுது பிறழுது.” " தேர் உருள தேங்காய் உருள தேரடி மணி நுனி உருள ’’

  • மலைமேல் மழை பெய்தது ” " அவள் அவல் தின்ருள் ” " அடடா! நரி காடேறுது ஒடும் நரிகளில் ஒரு நரி கிழநரி கிழநரி முதுகினில் ஒருபிடி நரைமயிர் ”

என்பன போன்ற சொற்ருெடர்களே ஆயத்தம் செய்து பன்முறைப் பயிற்சி தந்தால் நாக்கு திருந்தும்.

ஒலி பிறப்பியல் அறிவைக் கையாண்டும் இக் குறைகளைப் போக்கலாம். ஒலி பிறப்பியலே அறியாத ஆசிரியர் உடற்கூற்றியலை அறியாத மருத்துவருக்கு ஒப்பாவர். அரிய ஒலிகளே ஒலித்து ஒலி உறுப்புகளின் நிலையைத் தம் வாயினுல் காட்டலாம் : தக்க படங்களே வரைந்தும் விளக்கலாம் ; குழந்தைகளைப் பெரிய நிலைக் கண்ணுடிக்கு முன் நிறுத்தி அவரவர் வாயிலும் கண்டு உணரச் செய்யலாம். ந, ண ன ; ர, ற ; ல, ழ, ள ; போன்ற ஒலிகளை உச்ச ரிக்கப் பயிற்றும்பொழுது இம்முறைகளைக் கையாளலாம். இதற்கு ஆசிரியர் ஒலிபிறப்பியலே நன்கு அறிந்தவராக இருத்தல் வேண்டும்.

பெரும்பாலான குறைகள் ஆசிரியர் கூறுவதை மாணுக்கர்கள் சரியாகக் கேட்காததால் நேரிடுகின்றன. தக்க கேள்விப் பயிற்சிகளால் அவற்றைப்போக்கலாம். உச்சரித்தற்கு அரிய ஒலிகளே ஆசிரியர் உச்சரித்துக்காட்ட, மாணுக்கர்கள் அவரைப் பின்பற்றி உச்சரித்தலே கேள்விப் பயிற்சியாகும். முதலில் அவை பயின்றுவரும் முழுச் சொற் களேயும் பின்னர் தனி ஒலிகளையும் உச்சரித்துக் காட்டலாம்.