பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிப் பயிற்சி 24 f.

உச்சரிப்பதற்கு அருமையாகவுள்ள சில ஒலிகள் அடங்கிய பெயர்களில் அவ்வொலிகள் முறையே முதல் இடை கடைகளில் பயின்று வருமாறு அமைத்து அவை குறிக்கும் படங்களேக் காட்டிப் படித்துப் பயிலச் செய்து உச்சரிப்பின் குறைகளைக் களையலாம். ஒலித்தற்கரிய ஒலிகள் அடிக்கடி பயின்றுவரும் சிறு பாடல்களே மனப்பாடம் செய்யத்துாண்டி ஒப்புவிக்கச் செய்தும் இக்குறைகளை அகற்றலாம்.

நாளொன்றுக்கு ஓரிரண்டு தடவைகளாவது மூச்சுப் பயிற்சிகள் கொடுத்து ஒலியுறுப்புக்களுக்கு வலிமை அளிக்கலாம்.

11. ஒலி பிறப்பியல்

இளம் மாணுக்கர்களிடம் திருந்திய பேச்சைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒலிபிறப்பியல் அறிவு பெற்றிருக்க வேண்டும். அதற்கு அவர் பல ஒலிபிறப்பியல் நூல்களைப் பயின்றிருக்கவேண்டும். ஒலிபிறப்பியல்பற்றிய ஒருசில செய்திகளை மட்டிலும் ஈண்டுத் தருவோம்.

  • மொழிமுதற் காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்தாகும். இவ்வெழுத்துக்களின் பிறப்புபற்றியும் இலக்கணம் பற்றியும் தெரிவிக்கும் பகுதியே ஒலிபிறப்பியலாகும்; மொழியியலில் இஃது ஒரு முக்கிய பகுதியாகும். இவ்வியலை நன்கு அறிந்திருந்தால்தான் தமிழ்மொழியாசிரியர்கள் எழுத்து, சொல் ஆகியவற்றின் சரியான உச்சரிப்பை நன்கு அறிந்து ஒலிக்க முடியும். மானக்கரின் உச்சரிப்பில் நிகழும் பிழைகளைத் திருத்தவும், அவர்களுக்குச் சரியான உச்ச. ரிப்பைக் கற்பிக்கவும் கூடும். இவ்வெழுத்துக்கள் தோன்றி வெளிப்படுத்துவதற்கு நுரையீரல், காற்றுக் குழல், தொண்டை, வாய் ஆகிய உறுப்புக்கள் இன்றியமை யாதவை. ஒலித்தலுக்கு மிகவும் இன்றியமையாத கருவி

த-17