பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£42 தமிழ் பயிற்றும் முறை

யாகிய வாயை ஒலி பிறப்பியலார் இசையறை” என்று சிறப்பித்துப் பேசுவர்.

எழுத்துக்களின் குறியீடுகள் : தமிழ் எழுத்துக்களே இலக்கண நூலார் உயிரெழுத்து என்றும், மெய்யெழுத்து என்றும் பெயரிட்டு வழங்குவர். இப்பெயர்கள் சிறந்ததொரு காரணம்பற்றியே இடப்பெற்றுள்ளன. தனித்தியங்கும் ஆற்றலையுடைய எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் எனப்பட்டன : உயிருடன் கூடியே இயங்கவல்ல எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் எனப் பெயரிடப்பெற்றன. மெய்யெழுத்து-வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூவகைப்படும். உடலும் உயிரும்போல சேர்ந்து இயங்கும் எழுத்துக்களே உயிர்மெய் எழுத்துக்கள் என்று குறியீடு செய்துள்ளனர். உயிரும் மெய்யும் முதலெழுத்து எனப்படும். தனித்ததொரு தன்மையின்றிச் சார்ந்து வருதலே தமக்கு இயல்பாகவுடைய எழுத்துக்கள் மூன்றனச் சார்பெழுத்து என்பர் தொல்காப்பியர். அவை குற்றிய லிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்பன. நன்னூலார் சார்பெழுத்துக்களே உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுகம், ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என்று பத்துவகையாகப் பாகுபாடு செய்து பேசுவர். இவ்வாறு எழுத்துக்கள் பாகுபாடு செய்யப்பட்டிருப்பதன் காரணத்தை ஒரு சிறிது ஆராய்வோம். -

  • அவை தாம்,

குற்றிய லுகரம் குற்றிய லிகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன,

-தொல் எழுத். 2. * உயிர்மெய் யாய்தம் உயிரள பொற்றள

பஃகிய இஉ ஐஒள மஃகான் தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும்,

-நன். நூற்-60.