உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 தமிழ் பயிற்றும் முறை

வதற்கு இரண்டு வழிகள் உள. ஒன்று, வாய் ; மற்ருென்று, மூக்கு. மேற்கூறிய நாதத்தை மூக்கின் வழியாக வெளிவிட்டால் மெல்லெழுத்துக்கள் தோன்றும். அதனே வாயின் வழியாக வெளிவிட்டால் இடையெழுத்தும், உயிரெழுத்தும் தோன்றும். இவற்ருல் மெல்லெழுத்துத் தனியினமானதன் காரணம் அறியப்படும்.

காற்றை வெளிவிடுவதில் முறை வேறுபாடும் உண்டு. இதனை உள் முயற்சி” என்பர். காற்றை நாவினது நுனி, இடை, அடி, பக்கம் இவற்றுள் ஒன்றினுல் கண்டம், தாலு முதலிய இடங்களில் தடுத்துப் பின்பு வெளிவிடுதல் கூடும் ; அவ்வாறு தடுக்காமலும் வெளிவிடுதல் கூடும். தடுக்கும்பொழுது முழுவதும் தடுக்கலாம் ; சிறிதும் தடுக்கலாம். நாவினுல் தடுக்காமல் வெளியே விடும் காற்றினுல் உயிரெழுத்துக்கள் தோன்றுகின்றன. உயிரெழுத்துக்களே ஒலிக்கையில் தாலு, மேல் வாய் முதலிய இடங்களே நாக்குத் தொடினும் காற்றினேத் தடுத்தல் இல்லை. வல்லெழுத்துக்களேயும் மெல்லெழுத்துக்களையும் ஒலிக்கையில் கண்டம் முதலிய இடங்களில் நாக்கின் அடி முதலியவற்ருல் காற்றை முழுதும் தடுக்கின்ருேம். தடையை நீக்கும்பொழுது உண்டாகும் ஒலியே வல்லெழுத்து, மெல்லெழுத்துக்களாய் வெளிப்படுகின்றது. இடையெழுத்துக்களை ஒலிக்கையில், நாக்கினுல் காற்றைச் சிறிது தடுத்து வெளிவிடுகின்ருேம்.

மேற்கூறியவாறு, காற்று தடையின்றி வெளிவருதலின், உயிரெழுத்துக்கள் தாமே ஒலிக்க இயல்கின்றன. தடைப்பட்டு வருதலின் வல்லெழுத்து மெல்லெழுத்துக்கள் தாமே ஒலிக்க இயல்வன அல்ல. சிறிது தடைப்படுதலின் இடையெழுத்துக்கள் ஒராற்ருல் தாமே ஒலிக்க இயலுதலும் கூடும். ஒலிக்குந்திறத்தில் உயிரெழுத்துக்கட்கும் இனவெழுத்துக்களாகிய வல்லின மெல்லின வெழுத்துக்கட்கும் இடைப்பட்டிருத்தலின், இவை இடையெழுத்து எனப்பட்டன. இவற்றை அரையுயிர் (Semi-vowels) என்று ஆங்கிலத்தில் வழங்குதல் அறியத்தகும்.