பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 தமிழ் பயிற்றும் முறை

இப் பிறப்பிடம் நோக்கி எழுத்துக்கள் நெடுங் கணக்கில் நிறுத்தப் பெற்றன. சார்பெழுத்துக்களுள் ஆய்தம் ஒழிந்த எழுத்துக்களெல்லாம் தத்தம் முதலெழுத்தின் பிறப்பிடத்தையே பிறப்பிடமாக உடையன. ஆய்தம், தன்முன் நிற்கும் வல்லெழுத்தின் பிறப்பிடத்தையே தனக்குப் பிறப்பிடமாகக் கொள்ளும். ஒலி பிறப்பியல்பற்றிய முழு விவரங்களே அத்துறை நூல்களில் கண்டு கொள்க : அவற்றைத் தொல்காப்பியம், நன்னூல் முதலிய நூல்களிலுள்ள எழுத்துக்களின் பிறப்பைப்பற்றிக் கூறும் நூற்பாக்களின் கருத்துக்களுடன் ஒப்பிட்டு உணர்க.

தமிழ் நெடுங்கணக்கில் அகரமுதல் னகர விறுவாய்க்கிடக்கை முறையினைச் சிவஞான முனிவர் விளக்கிக் கூறும் காரணத்தையும் ஈண்டு அறிதல் சாலப் பயன்தரும்.

சிவஞான முனிவர் நன்னூல் விருத்தியுரை-நூற் 73-இன் உரை.