பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. படிப்பு

தாய்மொழிப் படிப்பில் வாய்மொழிப் பயிற்சிக்கு அடுத்த முக்கியமான பிரிவு படிப்பாகும். ஒதுவதொழியேல்’ என்ற பாட்டியின் வாக்கை எண்ணி உணர்க. ஒதுவது - படிப்பது. கையெழுத்தில் அல்லது அச்செழுத்தில் உள்ளதைக் கண்ணுல் பார்த்து வாயால் உச்சரித்துச் சொல்லிப் பொருள் உணர்வதைப் படிப்பு (Reading) என்கின்ருேம். படிப்பு என்பது எளிதான செயல் அன்று. வரிவடிவத்திலுள்ள சொற்களை ஒலிவடிவமாக மாற்றி உச்சரிக்கும் உறுப்புக்களும், சொற்களே நோக்கும் கண்களும் ஒத்துழைத்தால்தான் படிப்பு சரியாக நடைபெறும். எனவே படித்தலில் சொற்களைக் காணல், உச்சரித்தல், பொருளுணர்தல் என்ற முக்கூறுகள் உள்ளன. படிக்கும் பழக்கத்தை முதல் வகுப்பிலிருந்தே தொடங்கவேண்டும்.

நோக்கம் : கீழ் வகுப்புக்களில் படிப்பதில் திறமையான பழக்கங்கள் ஏற்பட்ட பின்னர், தானுகப் படிக்கும் பழக்கத்தை உண்டாக்கவேண்டும். மேல்வகுப்புக்களில் இப்பழக்கம் இன்னும் நன்கு உறுதியடையும். மேல் வகுப்பில் படிக்கும் நோக்கங்களை நான்கு வகையாகப் பகுக்கலாம். அவை கருத்துணர்தல், இலக்கிய இன்பம் நுகர்தல், கற்பனை ஆற்றலை வளர்த்தல், மொழித்திறம் அடைதல் என்பவை. இந்த நான்கு நோக்கங்களும் கைவரப்பெறுவதற்கு வேண்டிய பயிற்சி முறைகளை ஆசிரியர்கள் கையாளவேண்டும்.

பெரும்பாலும் நாம் கருத்துணர்வதற்காகவே படிக்கின் ருேம். பல புத்தகங்களைப் படிப்பதால் பல்வேறு செய்திகளை அறிய முடிகின்றது. அன்ருட வாழ்க்கைக்கு வேண்டிய செய்திகள், சுற்றுப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள், அறிவியல் உண்மைகள், நவீன பொறிநுட்ப சாதனங்