3248 தமிழ் பயிற்றும் முறை
களேப்பற்றிய செய்திகள் போன்றவற்றை அறிவதற்காகப் பல புத்தகங்களையும், நாள், வார, மாத இதழ்களேயும் மாணுக்கர்கள் படிக்கின்றனர். இது கருத்துணர்தல் நோக்கம் கைவரப் பெறுவதற்குப் படிப்பதாகும். படிப்பதில் நல்ல பழக்கம் ஏற்பட்டுப் பல புத்தகங்களைப் படிப்பதால் இலக்கியச் சுவை பெருகும் ; செஞ்சொற் கவி இன்பத்திலும் திளேக்கலாம். நூலினுல் பெறும் சுவை தெவிட்டாத தெள்ளமுதமாய் மேலும் மேலும் வளர்த்து நினையுந்தோறும் புதிய இன்பத்தைத் தரும். மானுக்கர்கள் தத்தமக்கு வேண்டிய கதைப் புத்தகங்கள், தன் - வரலாறுகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், காவியங்கள் ஆகியவற்றைப் படிப்பதால் இலக்கிய இன்பம் பெருகும். கற்பனை ஆற்றல் இன்றியமையாத பண்புகளில் ஒன்று ; இளம் மாணுக்கர்களிடையே அவ்வாற்றல் தோன்றுதல் மிகவும் இன்றியமையாததாகும். கவிதை இலக்கியங்கள், புதினங்கள் (Nowels), சிறந்த சிறுகதைச் செல்வங்கள், உயர்ந்த நாடகங்கள் முதலியவை இக் கற்பனை ஆற்றலே நன்கு வளர்க்கும். உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாளுல் வாக்கினில் ஒளி தானுகத் தோன்றும். படித்தலில் நான்காவதாகக் கைவரப்பெறுவது மொழித்திறம் அடைதல் ; பல புத்தகங்களைப் படிப்பதால் மாளுக்கர்களின் சொல் வளம் பெருகும் ; பலபுதிய சொற்களை அறிவர். மாளுக்கர்கள் சிந்தையில் ஒன்றனுள் ஒன்ருக உள்ள மூன்று கற்பனே வட்டங்களினுள் அவர்களுடைய சொற்களே அடக்கலாம். உள் வட்டத்திலுள்ள சொற்கள் அவர்களின் நெருங்கிய சொல் நண்பர்கள்; தேவைப்படும்பொழுது அவர்கள் பயன்படுவர். மானுக்கர்கள் விருப்பப்படி அச்சொல் நண்பர்கள் இயங்குவர். உள் வட்டத்திற்கு அடுத்துள்ள வெளி வட்டத்திலுள்ள சொற்கள் மாணுக்கர்களுக்கு அறிமுகமானவர்கள்”; கொஞ்சம் பழக்கம்தான் அவர் களிடம் உண்டு. பல புத்தகங்களைப் படிக்குந்தோறும் பழக்கப்பட்ட இச்சொற்கள் ஒவ்வொன்ருக நண்பர்களாகி உள் வட்டத்திற்கு வரக்கூடும். மூன்ருவதாக வெளிவட்டத்திலுள்ள சொற்கள் மாணக்கர்களுக்குப் புதியவர்கள்’.