பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு 249

அவர்களேப்பற்றி மாணுக்கர்கள் அதிகக் கவலை கொள்ளுவ தில்லை; அவர்களேச் சந்திப்பதற்கும் சிரத்தைஎடுத்துக்கொள் வதில்லை. ஆழ்ந்த படிப்பின்பொழுது இப்புதியவர்களுள் எவரையாவது சந்திக்க நேர்ந்தால் ஆசிரியர்கள். அவரை மானுக்கர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பார் ; நண்பர் களாகவும் செய்துவிடுவதுண்டு. அஃதெல்லாம் அவர்களைச் சந்திக்கும் இடத்தையும் காலத்தையும் பொறுத்தது. soa555rp Liq-ilīlīsīróLisqog (Extensive reading) offiதனேயோ அறிமுகமானவர்கள் நண்பர்களாகவும் புதிய வர்கள் அறிமுகமானவர்களாகவும் ஆதல் கூடும். எனவே, என்றும் சொல்லுலகத்தில் மாணுக்கர்களிடம் நண்பர்களும் இருப்பர் ; அறிமுகப் பட்டவர்களும் இருப்பர்; புதியவர்களும் இருப்பர்.

1. படிப்பின் வகைகள்

குறிக்கோளத் தெளிவாகக் கொண்டால்தான் எந்தச் செயலேயும் வெற்றியுடன் கொண்டுசெலுத்த இயலும். ஆசிரியர்களும் படிப்பின் நோக்கங்களைத் தெளிவாகச் சிந்தையிற் கொண்டால்தான் பயிற்று முறைகளேத் திட்டமாக அமைத்து வெற்றியுடன் கொண்டுசெலுத்தலாம். நோக்கங்களை அனுசரித்துப் படிப்பை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர் அறிஞர்கள்.

$[06ìr ş%Is 6u5| řfšGú) Lui;.ú!] (Dewelopmenta[ reading) : படித்தலில் உள்ள பல்வேறு திறன்களையும் அடைவதற்கு மேற்கொள்ளும் முறையையே இப்பெயரால் குறிக்கின்றனர். கண் நகர்ச்சி, கண்பாய்ச்சல், கண்பார்வை முதலிய திறன்களே வளர்த்து, படிப்பில் விரைவை உண்டாக்கல், கருத்துணர்தல், சொற்களஞ்சியத்தைப் பெருக்குதல், நினைவாற்றலே வளர்த்தல், வாய்விட்டுப் படித்தலிலுள்ள பல்வேறு கூறுகளிலும் பயிற்சி பெறுதல் முதலியவற்றைப் படிப்பிலுள்ள திறன்களாகக் கருதலாம்.