பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 தமிழ் பயிற்றும் முறை

Quirópg| GustáGjú Lily Lili (Recreational reading): இலக்கிய இன்பங்கருதியும், ஓய்வு நேரங்களைக் கழிக்கக் கருதியும், வாய்விட்டுப் படித்துப் பிறருக்கு மகிழ்ச்சி யூட்டக் கருதியும் படிப்பதை இப்பெயரால் குறிப்பிடலாம்.

usugir BG5%lu Lily sil, (Functional reading) ; Liušr கருதிப் படிக்கும் எல்லாப் படிப்பும் இத்தலேப்பில் அடங்கும். தொலைபேசியின் எண்ணைக் கண்டறிவது, புகைவண்டிசெல்லும் நேரத்தைக் காண்பது, பஞ்சாங்கக் குறிப்புக்களைக் கண்டறிவது போன்ற செயல்களிலிருந்து கருத்துடன் பாடப்புத்தகங்களைப் பயில்வது வரையிலுமுள்ள எல்லாவித மான படிப்பையும் இதனுள் அடக்கலாம்.

இந்த மூவகைப் படிப்பும் தனித்தனியாகவே இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒன்றை நோக்கமாகக்கொண்டு படித்தாலும் ஏனைய இரண்டும் கைவரப்பெறும். படிப்பின் திறன்களை வளர்க்கும் நோக்கத்துடன் படிக்கும்பொழுது குழந்தைகள் பொழுது போக்கிற்காகப் படித்தற்கும், பயன் கருதிப் படித்தற்கும் உரிய பகுதிகளே படித்தல் கூடும். பொழுது போக்கிற்காகப் படிக்கப்பெறும் கதையே படிக்கும் திறன்களை வளர்க்கும் நோக்கத்திற்காகப் படிக்கப் பெறலாம்; திறன்களே வளர்க்கும் பாடத்திட்டமே அறிவியல் களேப்பற்றிய செய்திகளே அறியவும் பயன்படலாம். என்ருலும், ஒவ்வொருவித படிப்பின் நோக்கமும் ஆசிரியரின் கருத்தில் தெளிவாக நிலவ வேண்டும்.

ஈண்டுக் குறிப்பிடப்பெற்ற மூன்று படிப்பு வகைகளும் எல்லா நிலையிலும் படிப்பைக் கற்பிக்கத் துணையாக இருக்கும்; அவற்றை அடிப்படை நோக்கங்களாகக் கொண்டால். தான் எல்லா நிலையிலும் படிப்பைச் சரியான முறையில் கொண்டுசெலுத்தலாம். -