உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு 255

அவர்கள் அதில் பற்று வைப்பர் ; படிக்கும் ஆர்வமும் இயல்பாக அவர்களிடம் எழும். உளவியலுக்கு ஒத்த சில முறைகளைக் கையாளவேண்டுமேயன்றி காரணகாரிய முறைக்கு ஏற்றவையென்று கருதி, உளவியல் முறைக்கு மாருகவுள்ள முறைகளைக் கையாளுதல் சரியன்று. இன்று பெரும்பாலும் கல்வித்துறையில் பணியாற்றுவோர் கற்பிக்க வேண்டிய பொருள்களில் கருத்தினைச் செலுத்திக் குழந்தைகளே அறவே மறந்துவிடுகின்றனர் ; அது தவறு. அவர்கள் கவனமெல்லாம் குழந்தைகளைப்பற்றியே இருத்தல் வேண்டும். அடியிற் கண்டவற்றைச் சிறு குழந்தைகளைப் படிப்பில் ஊக்குவிக்கும் முறைகளாகக் கருதலாம்.

(i) படங்களைப் பார்க்க விரும்பாத குழந்தைகளே இரார். வண்ணந்தீட்டிய படங்கள் இளம் உள்ளங்களே எளிதில் கவரவல்லவை. எனவே, கண்கவர் படங்களின் வாயிலாகப் படிப்பை வளர்க்கலாம். இத்தகைய படங்களின் கீழ் அவற்றிற்கு விளக்கம் தரும் முறையில் சில சொற்களையும் சொற்ருெடர்களேயும் எழுதிப் படங்களே வகுப்பறையில் தொங்க விட்டிருந்தால், அவற்றைக் கண்ணுறும் குழந்தைகள் இன்பம் அடைவர். கண்ணுற் பெறும் இன்பம் கருத்தினற்பெறும் இன்பத்திற்குத் துரண்டுகோலாக அமைந்து அப் படங்களின் கீழ் எழுதப் பெற்றுள்ளவற்றைத் தெரிந்துகொள்ள அவர்கள் விழைவர். குழந்தைகளுக்கென்று தயாரித்து அழகாக அச்சிட்ட வண்ணப் படங்களுள்ள புத்தகங்களே வாங்கிக் கொடுத்து அவற்றிலுள்ள படங்களேப்பற்றிப் பேசச் செய்யலாம்.”

(ii) வகுப்பறைகளிலும் பள்ளித்தோட்டங்களிலும் ஆடுகளங்களிலும் சில கட்டளே அல்லது வேண்டுகோள் அட்டைகளைத் தொங்கவிடலாம். கட்டளே களின் படி குழந்தைகள் செய்யத் தவறினுல் அவர்களே அழைத்து அக் கட்டளை அல்லது வேண்டுகோள் தொடர்களே உரக்

2 இன்று பல சிறுவர் நூல்கள் மிக அழகான முறையில் வண்ணப் படங்களுடன் வெளிவந்துள்ளன.