பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு 257

(6) செய்தித் தாள்கள், துண்டுப் பிரசுரங்கள், படக்காட்சிகள், விலைப்பட்டிகள் முதலியவற்றைப் படிக்கச் செய்யலாம். குழந்தைகளே வெளியில் கூட்டிச் செல்லும்பொழுது தெருக்கள், கடைகள், சிற்றுண்டிச்சாலைகள், பூம்பொழில்கள், புகைவண்டி நிலையம், படக்காட்சி விளம்பரம் முதலியவற்றின் பெயர்களைப் படிக்கத் துண்டலாம். இவற்றில் ஒரு சுவையை உண்டாக்கிவிட்டால் குழந்தைகள் தாம் காண்பனவற்றை யெல்லாம் படித்து அறிந்துகொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ளுவர்.

(7) சிறிய கதைப் பாடல்கள், பாப்பாப் பாடல்கள், செவிலிப் பாடல்கள், ஆட்டப் பாடல்கள் முதலியவற்றை இசையுடன் படித்துக் காட்டிப் படிக்கத் தூண்டலாம். 'கண்ணன்', 'பூஞ்சோலை', 'கல்கண்டு’, ‘அம்புலிமாமா” போன்ற குழந்தைகளின் பருவ வெளியீடுகளே இதற்கு ஓரளவு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆசிரியர்களே பாட்டுக்களே இயற்றி நல்ல தாளில் பெரிய எழுத்துக்களில் அழகாக எழுதிக் குழந்தைகளின் கவனத்திற்குக் கொண்டு வரலாம்.

(8) கதைகள் குழந்தைகளின் கருத்தை ஈர்க்கக் கூடியவை. புத்தகங்களிலிருந்து சிறிய கதைகளைக் குழந்தைகளுக்கு அடிக்கடிப் படித்துக்காட்டிக் கதைகளில் அவர் களுக்கு ஆர்வத்தை ஊட்டி அவைபோன்ற பல கதைகளே அவர்களேயே படிக்குமாறு தூண்டலாம். ஒரு கதையின் பாதியைச் சொல்லி, ஏனைய பாதியை படிக்கும்படி தூண். டல், சில கதைகளே க் கூறி அவைபோன்றவை கொண்ட புத்தகத்தைக் காட்டல் போன்ற முறைகளைக் கையாள

லாம்.

இம்முறைகளே யெல்லாம் மேற்கொள்ளுவதற்கு முன்னர் குழந்தைகள் தெளிவாகப் பேசவும், கருத்துணரவும் ஆற்றல் பெற்றிருக்கவேண்டும். படிப்பதை அறிவதற்கும் படிப்பில் சு ைவ உண்டாவதற்கும்

த-18