பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 தமிழ் பயிற்றும் முறை

பயிற்சியை அளிப்பதற்கு முன்னர் ஓரளவு பட்டறிவும் பெற்று அப் பட்டறிவில் கண்டவற்றைப்பற்றிய சொற்களையும் குழந்தைகள் அறிந்திருக்க வேண்டும், பிறந்தது முதல் வீட்டிலேயே பலவித பட்டறிவும் பேச்சுப் பழக்கமும் சுமார் 800 சொற்களின் அறிவும் சாதாரணமாக ஐந்தாண்டு நிரம்பிய குழந்தைகள் பெற்றிருப்பர். ஆசிரியர்கள் முதன்முதலாகத் தம்மிடம் வரும் குழந்தைகளே அவர்கள் வீட்டிலும் பள்ளியிலும் கண்டறிந்திருக்கும் பொருள்களைப்பற்றியும் பட்டறிந்திருக்கும் நிகழ்ச்சிகள்பற்றியும் வினவி அவற்றிற்கு விடையிறுக்கச் செய்ய வேண்டும். குழந்தைகள் கூச்சத்தைவிட்டு உரையாடத் தொடங்கிய பிறகு படிப்பைத் தொடங்குதல் சிறந்தது.

4. படிப்பு பயிற்றும் முறைகள்

உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தாய்மொழி. யாசிரியர்கள் தொடக்க நிலைப் பள்ளிகளில் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் முறைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். அடிப்படை எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்பதை அறியாது தம் பணியைத் திறமையாக ஆற்ற இயலாது. அம்முறைகளைக் கையாளுவதில் திறமையுடையவர்களாக ஆகாவிடினும், அம்முறைகளின் நெறியைத் (Principle) தெரிந்து அவை எவ்வாறு கையாளப்பெறுகின்றன என்பதைப்பற்றிய மேம்போக்கான அறிவையாவது பெற்றிருத்தல் இன்றியமையாதது. கீழ் வகுப்புக்களில் பயிற்றல் நன்னிலையிலிருந்தால்தான் ஆசிரியர்கட்கு எவ். வாறு நல்ல முறையில் தம் வேலையைத் தொடங்கலாம் என்ற கருத்துக்கள் தோன்றும்; பயிற்றல் சரியற்றதாக இருப்பின் அங்குப் படித்து வெளிவரும் குழந்தைகளின் தேவையை யறிந்து அவர்கள் தம் முறைகளை மாற்றியமைத்துக் கொள்ளலாம். இம்மாதிரியே ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும் கீழ் வகுப்புக்களில் கையாளப்பெறும் முறைகளேயும் மேல்வகுப்புக்களில் கையாளவேண்டிய முறைகளையும் கருத்தில் அமைத்துக்கொண்டு பணியாற்றினல்,