பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு 259

படிப்பு நல்ல முறையில் செல்லும். படிப்பு தொடர்ந்து நடைபெற வேண்டிய தொன்ருதலால், ஆசிரியர்கள் இதை உளங்கொண்டு பணியாற்றவேண்டும்.

இன்று ஒவ்வொரு நிலைப் பள்ளிகளிலும் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் தொழில் முறையில் உறவுகொள்ளாது உள்ளனர். உயர்நிலைப் பள்ளியில் வேலை செய்பவர்கள் தொடக்கநிலைப் பள்ளிகளில் பணியாற்றுபவர்களேவிடத் தம்மை அறிவிலும் பிறவற்றிலும் உயர்ந்தவர்களாகக் கருதிக்கொள்ளுகின்றனர். கல்லூரிகளில் பணியாற்றுவோரோ தம்மை உயர்ந்த சாதியினராகக் கருதிக்கொண்டு இந்த இரண்டு நிலைப் பள்ளியாசிரியர்களுடன் சாதாரணமாகக்கூட கலந்து பழகுவதில்லை. இவர்கள் பிறவிலேயே ஆசிரியராதற்குரிய தகுதிகளனைத்தும் பெற்றுவிட்டதாகக் கருதிக் கொண்டிருப்பவர்கள். இவர்கட்கு ஆசிரியப் பயிற்சிஇன்றியமையாதது என்று கல்வி நிபுணர்கள் வற்புறுத் தாமையே இதற்குக் காரணம் என்று கருதலாம். தொழில் துறையில் ஒவ்வொருவரும் தத்தம் பிரச்சினேகளைப் பொது மேடைக்குக் கொண்டு வந்து ஆராய்ந்தால்தான் தவறுகளேத் திருத்திக்கொள்ளவும், ஒருவர் கையாண்டு வெற்றி கண்ட புதிய முறையைப் பிறர் கையாளவும் வாய்ப்புக்கள் ஏற்படும். அரசினரும் இப்பிளவை அதிகரித்துவிட்டனர் என்றுதான் சொல்லவேண்டும். ஆசிரியர் தொகுதிக்கு வாக்களிப்பவர்களில் தொடக்கநிலைப் பள்ளிகளில் பணியாற்றுபவர்களைச் சேர்க்கவில்லை. எல்லா நிலை ஆசிரியர். களும், தொழில்முறையில் ஒன்றுசேர்ந்து தத்தம் பிரச்சினைகளே ஆராயும் நாள் விரைவில் ஏற்பட வேண்டும். அது கிடக்க. - -

ஆதி மனிதன் மொழி கற்ற வரலாற்றிலிருந்து சிறு குழந்தைகளுக்குப் படிப்பு கற்பிக்கும் முறையை ஒருவாறு அறுதியிடலாம். மனித சமூகம் பல்லாயிர ஆண்டுகளாக வளர்த்துப் பண்படுத்திய மொழியை ஒரு குழந்தை சில ஆண்டுகளில் கற்றுக்கொள்ளுகின்றது. கற்றலில் நமது