பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 தமிழ் பயிற்றும் முறை

மூதாதையர் அடைந்த பட்டறிவைப் பயன்படுத்தி நமது முறையை அறுதியிடுகின்ருேம். ஆதி மனிதன் முதலில் வாய்ப்பேச்சினே மட்டிலும் கற்ருன்; பிறகு ஒவியங்களே எழுதித் தன் கருத்துக்களைப் பிறருக்கு அறிவித்தான்; நாளடைவில் ஒவியங்களுக்குப் பதிலாக சொற்களைக் கையாளும் திறமையைப் பெற்ருன். பிறகு தனித்தனி எழுத்துக்களைக் கண்டு மொழியின் நெடுங் கணக்கை வரையறை செய்தான். இந்த முறையிலேயே குழந்தைகளுக்குப் படிக்கும் பழக்கத்தை உண்டாக்கினல் சாலப் பயன்தரும். இவ்விடத்தில் ஒவ்வொரு மொழியாசிரியரும். மொழி வரலாற்றைப்பற்றி ஒரளவு தெரிந்துகொள்வது இன்றியமையாதது என்று கூறின் அது மிகையன்று.

இன்று குழந்தைகளுக்குப் படிப்பு கற்பிப்பதில் பல முறைகள் கையாளப்பெற்று வருகின்றன. இவை எழுத்து முறை, சொல்முறை, பார்த்துச் சொல்லும்முறை, சொற் ருெடர்முறை, கதை முறை எனப் பலவாகும். வனிதையர் ஆடையில் நாகரிகம் அடிக்கடி மாறுவதைப்போல், கல்வித் துறையில் கற்பிக்கும் முறைகள் அடிக்கடி மாறுவதில்லை. ஆல்ை, குழந்தைகளுக்குப் படிப்பு கற்பிக்கும் முறைகளின் வரலாற்றைக் கவனித்தால் புரட்சிகரமான முறை என்று கருதக்கூடியதும் சிறிது காலத்திற்குத்தான் செல்வாக்குடன் திகழ்கின்றது ; அது நீக்கப்பெற்றுப் புதிய முறை கையாளப் பெறுகின்றது. குழந்தைகளுக்குக் கற்பிக்கும் முறைகளில் எது சிறந்தது என்று இன்னும் கல்வி நிபுணர்கள் துணிந்த பாடில்லை. சிறந்த முறையைத் துணிவது எளிதான செயலும் அன்று. அதற்கு நான்கு காரணங்கள் உள. முதலாவது : ஒரு நல்ல ஆசிரியர் ஒர் எளிய செல்வாக்கற்ற முறையைக் கையாண்டும் நல்ல பலனே அடைதல் கூடும் ; சாதாரண ஆசிரியர் ஒருவர் நல்ல முறைகளைக் கையாண்டு பெறும் பயனேவிட அதிகமாகவே இவர் பெறக்கூடும். வகுப்புக்களில் எத்தனையோ எதிர்பாராத சந்தர்ப்பங்கள் எழுகின்றன. குழந்தைகளிடம் உற்சாகத்தை எழுப்பி அவர்களைத் தொடர்ந்து படிக்கவைக்கும் கூறு எந்த முறையிலும் இல்லை. இரண்டாவது : படிப்பு கற்பிக்கக்