உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு £26 1

கையாளப் பெறும் முறை பள்ளி நடைமுறையை ஒட்டியிருத்தல் வேண்டும். இஃதும் எளிதான செயலன்று. முறைகளுக்கு வேண்டும் தேவைகளை முற்றுவிக்கப் பள்ளியின் நடைமுறை ஒரு பெருந்தடையாகவே இருக்கும். இருபது யாண்டுகட்கு முன்னர் வகுப்பறைச் சூழ்நிலையில் கையாளப் பெற்ற முறைகள் யாவும் இன்றைய வகுப்பறைச் சூழலுக்குச் சரியானவையாக இரா. மூன்ருவது: பள்ளி. யிருக்கும் இடத்தை யொட்டி முறைகளின் செல்வாக்கும் மாறும். நாட்டுப் புறத்தில் ஒரே அறையில் பணியாற்றும் ஆசிரியர் நகர்ப்புறத்தில் பல வசதிகளுடன் பணியாற்றும் ஆசிரியரைப்போல் திறமையுடன் பணியாற்ற இயலாது. செல்வர் வாழும் பகுதிப் பள்ளிகளில் நல்ல செல்வாக்குப் பெற்றிருக்கும் முறைகள் வறியர் வாழும் பகுதிப் பள்ளிகளுக்கு ஒத்துவரா. நான்காவது : சோதனைகளால் முறைகளின் உயர்வு தாழ்வுகளே அறுதியிடுதலும் எளிதன்று. இத்தகைய சோதனைகள் செய்யப்பெறும்பொழுது சூழ்நிலை, இதர சாதனங்கள் முதலியவை ஒரேமாதிரியாக இருத்தல் முடியாது.

இனி, படிப்பு கற்பித்தற்கு நடை முறையில் கையாளப்பெறும் ஒரு சில முறைகளே ஆராய்வோம் :

(i) எழுத்துமுறை : இது மிகப் பழைய முறை. பண்டைக் காலத்திலிருந்து உலகில் எல்லா நாடுகளிலும் இம்முறை வழக்கிலிருந்து வருகின்றது. பழங்காலத்தில் ஃபோனிஷியர்கள், கிரேக்கர்கள், உரோமானியர்கள் ஆகியோர் இந்த முறையை மேற்கொண்டனர். இன்றும் நமது நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் தொடக்கநிலைப் பள்ளிகளில் இம் முறை மேற்கொள்ளப்பெற்று வருகின்றது. செட்டிமார் நாட்டிலுள்ள "ஏட்டுப் பள்ளிக்கூடங்களில்,” இம்முறையின் செல்வாக்கை இன்றும் காணலாம். இம். முறைப்படி தமிழ் நெடுங்கணக்கு வரிசை முறை தவருது எண்களைப்போல் கற்பிக்கப்பெறுகின்றது. எழுத்துக்களை முதலில் கற்பித்து அதன் பிறகு படிக்கக் கற்பிப்பதால்