படிப்பு 26S
ஒரே சமயத்தில் கற்கவேண்டியிருப்பதால், கற்றல் கடின மாக இருக்கும். தமிழ்நெடுங் கணக்கிலுள்ள எல்லா எழுத்துக்களேயும் இப்படிப் படிப்பது வீணே. சில தமிழ் எழுத்துக்கள் சாதாரண வழக்குச் சொற்களில் வருவதில்லே. ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கும்பொழுது யெள, பெள, ங் வரிசை, ளு வரிசை முதலியவைகளே ஒப்புவிப்பதாலும், எழுதுவதாலும் படிப்பதிலுள்ள ஆர்வம் குன்றுகின்றது: படிக்கத் துடிக்கும் குழந்தை மந்த திலேயை யடைந்து விடுகின்றது. எல்லாவற்றையும்விட இம்முறையில் கவர்ச்சியும் உற்சாகமும் இல்லை. ஆணுல், குழந்தைகளின் கவனத்தை ஈர்த்து அவர்களுக்கு உற்சாகமூட்டச் சில உபாயங்கள் கையாளப்பெறுகின்றன. ஒவ்வொரு எழுத்தை யும் இம்முறையில் கற்பிக்கும்பொழுது அவ்வெழுத்தைக் கொண்டு தொடங்கும் பெயரோடு கூடிய ஒரு பொருளின் படத்தையும் அதன் கீழ் அவ்வெழுத்தையும் அச்சிடுவர். சில சமயம் படத்தின் பெயரிலுள்ள முதல் எழுத்து வேறுநிறத்தால் காட்டப்பெறுவதுமுண்டு. குழந்தைகள் படங்களேப் பார்த்து எழுத்துக்களின் வரி வடிவங்களையும் ஒலிகளேயும் உற்சாகமாகக் கற்பர். பின்னர் எழுத்துக்களைக் கூட்டிச் சொற்களைக் கற்பர். படங்களைப் பார்க்கும்வரையில்தான் உற்சாகம் இருக்கும்; எழுத்துக்களைக் கூட்டிப்படிக்கும்பொழுது உற்சாகம் குன்றிவிடும்.
இம்முறையில் நிறைகளே இல்லை என்று சொல்லிவிடவும் முடியாது. ஆங்கிலம் போலன்றி, தமிழ் மொழியில் உச்சரிப்பது போலவே எழுதுகின்ருேம்; எழுதுவது போலவே உச்சரிக்கவும் செய்கின்ருேம். ஓர் ஒலி ஒரே எழுத்தால்தான் குறிக்கப்பெறுகின்றது; ஓர் எழுத்து ஓர் ஒலிக்கே அறிகுறியாகவும் உள்ளது. ஆதலால் இம்முறை தமிழ் எழுத்துக்களே எளிதாகக் கற்பதற்கு நன்கு துணை செய்கின்றது. குழந்தைகள் எழுத்துக்களின் சரியான உச்சரிப்பைத் தெரிந்து கொள்வதால், எழுத்துப் பிழையில்லாமல் படிக்கவும் எழுதவும் கற்க இடமுண்டு. எழுத்துக்களின் பிறப்பு முறைப்படி உயிர், மெய், உயிர்