பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#264 தமிழ் பயிற்றும் முறை

மெய் என்ற வரிசையில் படிப்பதால், எழுத்துவரிசை முறையை அறிவதற்கும், பிற்காலத்தில் ஒலிபிறப்பியலை அறிவதற்கும் எளிதாக இருக்கும்.

(ii) சொல்முறை : நானூறு யாண்டுகட்கு முன்னதாக காமெனியஸ் (Comenius) என்பார் சொல் முறையைக் கண்டறிந்ததாகக் கூறுவர். இன்று இம் முறை படிப்புத் திட்டங்களில் மிகவும் செல்வாக்குப் பெற்றுள்ளது. சொல் என்பது எழுத்துக்களின் தொகுதியன்று. அதற்கெனத் தனி மதிப்பு உண்டு என்ற உளவியல் உண்மையின் அடிப்படையில் அமைந்துள்ளது இம் முறை. குழந்தைகள் பசுவைக் காணும்பொழுது தலையை வேருகவும், உடலை வேருகவும், வாலே வேருகவும், நான்கு கால்களே வேருகவும் காண்பதில்லை; அதை ஒரு தனிப்பட்ட'முழுப்பிராணியாகவே காண்கின்றனர். இம்மாதிரியே சொற்களும் குழந்தைகளுக்குத் தனிப்பட்ட பொருள்களை உணர்த்தும். ஒரு தனி எழுத்தைக் கற்றறிதல் போலவே ஒரு முழுச் சொல்லையும் குழந்தைகள் எளிதாகக் கற்றுக் கொள்வர். சொல்லப் பொருளுணர்த்தும் அளவாகக் கொண்டு கற்பிப்பதால் இதற்குச் சொல்முறை என்று பெயர் ஏற்பட்டது.

இம்முறைப்படி ஆசிரியர் ஒரு சொல்லேக் கரும்பலகையில் எழுதி, வகுப்பிலுள்ள குழந்தைகளுக்கு உச்சரித்துக்காட்டுவார்; பிறகு குழந்தைகளே ஒவ்வொருவராக உச்சரிக்கச் செய்வார். இவ்வாறு சில சொற்களைக் கற்பித்த பிறகு, அவற்றைச் சிறு சொற்ருெடர்களாக இணைத்துக் கற்பிப்பார். சொற்கள் எழுதப்பெற்ற மின்னட்டைகளைக் கொண்டு அவற்றை விரைவாகவும் பிழையின்றியும் படிக்கும் திறமையை வள்ர்க்கலாம். இன்னொரு விதமாகவும் ஆசிரியர் இம் முறையைக் கையாளுவதுண்டு. ஒரு படத்தைக் காட்டி அதைக் குறிக்கும் சொல்லேக் கரும்பலகையில் எழுதி உச்சரித்துக் காட்டிக் குழந்தைகளையும் உச்சரிக்கும்படி செய்வார். படங்களே மட்டிலும் தனித்தனியாகக் கொண்ட மின்னட்டைகள், அவற்றைக் குறிக்