பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 தமிழ் பயிற்றும் முறை

இம்முறையில் சில குறைகளும் இல்லாமல் இல்லை. எனினும், அவற்றை எளிதில் சமாளித்துக் கொள்ளலாம். எழுத்துக் கூட்டிப் படிக்கும் பழக்கம் இல்லாததால் புதிய சொற்களைப் படிக்கும்பொழுதும், பார்க்காமல் எழுதும்பொழுதும் எழுத்துப் பிழைகள் உண்டாகும் என்று கூறுவர். தெரிந்த சொற்களில் பெற்ற பயிற்சிகளேப் போலவே, புதிய சொற்களைப் பயிலும்பொழுதும் சொற்களைப் பன்முறை உச்சரித்தல், எழுத்துக் கூட்டுதல், எழுதுதல், அடிக்கடி முழுச் சொற்களாகவே உற்றுநோக்குதல் முதலிய பயிற்சிகளால் அப் பிழைகள் ஏற்படாமல் செய்யலாம். சொற்களை முழுமையாக உச்சரித்துப் படித்துக் கருத்துணர்ந்தபின் அவற்றின் உட்பகுதிகளேயும் தனித்தனியாக உச்சரித்து எழுத்துக் கூட்டிக் கற்பித்தால் இக்குறையே நேரிடாது. ஆங்கிலத்தில் குறை ஏற்படலாம் : உச்சரிக்கின்றபடியே எழுதும் தமிழ் மொழியில் இக்குறைக்கு இடமே இல்லை என்று துணிந்து கூறலாம். குருட்டுப்பாடமாகச் சொற்களின் வரிசையைப் படங்களிலிருந்து கற்றுக்கொள்வர் என்றும், அவற்றைக் கருத்துணராமலும் பாராமலும் விரைவாகப் படித்துக்கொள்வர் என்றும் மற்ருெரு குறை கூறப்படுகின்றது. இக்குறையையும் எளிதில் நீக்கலாம். உச்சரிக்கும்பொழுது சொற்களின்மீது விரல்களை வைத்துக்கொண்டுவரச்செய்தல், தனிச் சொற்களே உச்சரிக்கும்படி அடிக்கடிக் கேட்டல், பாடத்தில் வரும் சொற்களே முறை மாற்றி எழுதிப்படிக்கச் செய்தல் முதலியவற்ருல் இக்குறை நீங்கும். மணல், சணல், தணல் ; மரம், வரம், சரம் ; பாக்கு, நாக்கு, சாக்கு , ஏர், வேர், கார் போன்ற ஏறக்குறைய ஒர் ஒசைச் சொற்கள் அடுத்து வரும்பொழுது மாற்றிப் படிப்பர் என்று இன்னுெரு குறையும் கூறப்படுகின்றது. இத்தகைய சொற்களின் நடுவில் மாற்ருேசைச் சொற்களை அமைத்து இக்குறையை நீக்கலாம். இம் முறையால் படிப்பு விரைவாக வளர்ந்தாலும், எழுத்துக்களே உடனுக்குடன் கற்றுக்கொள்ள இயலாது என்ற குறை காட்டப்படுகின்றது. இஃது உண்மை தான் ; படிக்கக் கற்றுக்கொண்ட பின்னரே எழுத்துக்கள்