பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு ä67"

கற்பிக்கப்படவேண்டும். தமிழ் நெடுங்கணக்கில் எல்லா எழுத்துக்களையும் தொடக்கத்திலேயே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை ஒன்றும் இல்லை. மூன்ரும் வகுப்பில் நெடுங்கணக்கைச் சரியாக அறிந்தால் போதுமானது.

(iii) கண்டு சொல்லும் முறை : எழுத்துக்களைக் கூட்டாமல் சொற்களையோ சொற்ருெடர்களையோ பார்த்ததுமே முழுமையாக அப்படியே உச்சரித்துப் படிப்பதைக் கண்டு சொல்லும் முறை என்று கூறுகின்றனர். இம் முறையால் முழுச் சொற்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்பெறுகின்றன. சொல்முறையில் கையாளப்படும் படங்களே இம்முறையில் பயன்படுத்துவதில்லை. ஆனல், கற்றுக் கொண்ட சொற்களேத் தொகுத்து சொற்ருெடர்களாகக் கற்பிப்பர். இம் முறையால் குழந்தைகளுக்கு படிப்பில் உற்சாகம் குறையும். தொடக்க நிலையில் படங்களின்றிச் சொற்களின் கருத்துக்களே அறிந்து கொள்வது அரிது. இம்முறையில் சொற்கள் ஒலி அளவிலேயே நின்றுவிடக் கூடும். சொல் முறையை இம் முறையுடன் கலந்து கையாண்டால் நல்ல பயனைக் காணலாம்.

(iv) சொற்ருெடர் முறை : கருத்துணர்ந்து படிப்பதில் வற்புறுத்துவதற்காகக் கண்டறிந்த புதிய முறை இது. சொற்ருெடரையே கருத்தினேத் தெரிவிக்கும் அளவு கோலாகக் கொண்டுள்ளதால் இம் முறைக்குச் சொற்ருெடர் முறை” என்ற பெயர் ஏற்பட்டது. இம் முறைப்படி குழந்தைகள் முதன் முதலாகச் சொற்ருெடர்களேயே கற்கின்றனர். சொற்ருெடர்களைப் படிக்கப் பழகிய பிறகு அத் தொடர்களிலுள்ள சொற்களையும் எழுத்துக்களையும் கற்கின்றனர். இம் முறை கண்டு சொல்லும் முறையின் விதியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நாம் பேசுவதில் சில பல சொற்களடங்கிய தொடர்களையே மேற்கொள்ளுகின்ருேம். சொற்ருெடர் ஒரு முழுக் கருத்தைத் தெரிவிப்பதால் அதுவே மொழியின் முக்கிய உறுப்பாகும். குழந்தைகளும் சொற்ருெடர்களாலேயே தம்