பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 தமிழ் பயிற்றும் முறை

கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். எனவே, இம் முறை குழந்தைகளுக்கு இயல்பானதும் உளவியலுக்கு ஏற்றதும் ஆகும். ஒரு சிறிய கதையைச் சிறிய சொற்ருெடர்களால் அமைத்துக் கற்பித்தால் அஃது உளவியலுக்கும் குழந்தைக்கும் ஏற்றதாய் அமைந்து நிறைந்த பயனையும் தரும் என்பதில் ஐயமில்லை.

இம்முறையில் கற்பித்தல் இவ்வாறு தொடங்கப் பெறும்: வகுப்பறையிலோ பள்ளியிலோ உள்ள ஏதாவது ஒரு பொருளேப்பற்றியாவது, குழந்தைகளுக்குச் சொந்தமான ஏதாவது ஒரு பொருளைப்பற்றியாவது படிப்பைத் தொடங்க லாம். அப்பொருளேப்பற்றி குழந்தைகளிடமிருந்து சில சொற்ருெடர்களே வருவித்துப் புத்தகங்களாகத் தொகுக்கலாம். பெரிய தாள்களில் மேலே படம் போடுவதற்கு இடம்விட்டு சில பொருள்களைப்பற்றித் தனித் தனியாகச் சொற்ருெடர்களே எழுதலாம். இத் தாள்களில் மேல் வகுப்பு மாளுக்கர்களைக்கொண்டோ ஆசிரியரோ படங்களை வரையலாம். ஒவ்வொரு நாளும் குழந்தைகளிடமிருந்து வருவிக்கும் சொற்களைப் புத்தகங்களாகவும் படத்தாள்களாகவும் தொகுக்கலாம். அடிக்கடிக் குழந்தைகளின் பட்டறிவிலுள்ள சொற்களும் சொற்ருெடர்களும் இவைகளில் அமையவேண்டும். முதற் புத்தகத்தில் 50-லிருந்து 150 வரை சொற்களின் எண்ணிக்கையிருக்கலாம். ஒவ்வொரு சொல்லையும் ஏழிலிருந்து இருபது தடவை வரை மீண்டும் மீண்டும் கையாளலாம். இவ்வாறு கையாண்டால்தான் அச் சொற்கள், காண்பதாலேயே மனத்தில் நன்கு பதியும். இவ்வாறு தேவையான புத்தகங்களையும் படத்தாள்களையும் தயாரித்த பின்னர் குழந்தைகளுக்கு அச் சொற்ருெடர்களைக் கற்பிக்கலாம். இதல்ை சொற்ருெடர்களிலுள்ள சொற்களையும், பின்னர் சொற்களின் உச்சரிப்பையும், எழுத்துக்களின் ஒலி வேறுபாட்டையும் குழந்தைகள் கற்பர்.

வகுப்பறை, பள்ளித்தோட்டம், விளையாடும் திடல் ஆகிய இடங்களில் சில செயல்களைச் செய்யும்படி தூண்டும்