பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 தமிழ் பயிற்றும் முறை

மேற்கூறப்பெற்ற முறைகளின் குறைகளும் நிறைகளும் இம்முறைக்குப் பொருந்துவதால் அவற்றை ஈண்டு மீண்டும் குறிப்பிடத் தேவையில்லே. ஆனால், கதை முறை குழந்தைகளின் இயற்கை ஆவலேத்துாண்டி படிப்பிற்கு ஒரு தேவையை அளிக்கின்றது : வாய்மொழிப் பயிற்சிக்கும் சிறந்த வாய்ப்புக்களே நல்குகின்றது; இம் முறையில் பல கோவையான சொற்ருெடர்களைக் கற்பதில் வெறுப்புத் தோன்றலாமெனினும் அவை கதையை விளக்குவதால் படிப்பதில் ஆவலே ஊட்டி வெறுப்பைப் போக்கிவிடும்.

ஆசிரியருக்குக் குறிப்பு : எல்லா முறைகளின் நல்ல கூறுகளைத் தொகுத்த தொரு கலவை முறையே சிறந்தது. பட்டறிவும் கற்பிக்கும் ஆற்றலும் கைவரப்பெற்ற ஆசிரியர்கள் தம் அறிவுத்திறமையால் ஒவ்வொரு முறையிலுமுள்ள நல்ல கூறுகளைத் தக்க அளவிலும் வகையிலும் சேர்த்துக் குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்றவாறு கையாண்டால் படிக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு எளிதில் கிட்டும் ; குழந்தைகளும் குறைந்த காலத்தில் நிறைந்த பயனை அடைவர்.

5. படிப்பில் பயிற்சி தரவல்ல துணைக்கருவிகள்

குழந்தைகளுக்குப் படிப்பில் பயிற்சி தரக்கூடிய துணைக் கருவிகள் குழந்தைகளின் மனநிலை, பட்டறிவு, அறிவு, ஆற்றல் ஆகியவைகளுக்கு எட்டக்கூடியவையாக இருத்தல் வேண்டும். குழந்தைகள் விரும்பும் பொருள்கள், ஆசிரியர்கள் அவர்களுக்கு ஏற்றனவாகக் கருதும் பொருள்கள், கதைப் பாடல்கள், பாப்பாப் பாடல்கள், ஆட்டப்பாடல்கள், செவிலிப் பாடல்கள் முதலியவற்றை ஆசிரியர்களே ஏற்ற விளக்கப் படங்களோடு வேறுபட்ட பலவகைப் படிப்புத் தாள்களில் எழுதி ஆண்டு முழுவதற்கும் வேண்டிய அளவில் தொகுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.