பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு 273

படிப்புத் தாள்களே உண்டாக்க வேண்டும் என்ற ஆவலேக் குழந்தைகளிடம் எழுப்பி, எதைப்பற்றி எழுத லாம் என்பதை விளுக்கள் மூலம் அவர்களிடமிருந்து வருவித்து வேலையைத் தொடங்கலாம். அவர்கள் குறிப்பிடும் பொருள்களேப்பற்றிப் பழுப்பு அல்லது மஞ்சள் தாள்களில் கறுப்பு அல்லது நீலநிறத்தில் பெரிய எழுத்தில் சில சிறிய சொற்ருெடர்களே எழுதவேண்டும்; படம் திட்டுவதற்கு மேலே இடம் விட்டு இவற்றை எழுதவேண்டும். இதைப்போல் சிறு கதைகள், கதைப் பாடல்கள் முதலியவற்றையும் படிப்புத்-தாள்களாக அமைக்கலாம். சிறிய அளவில் ஒவ்வொரு குழந்தைக்கும் வேண்டிய படிகளாகவும் ஆயத்தம் செய்யலாம்; அல்லது வகுப்பில் ஒவ்வொரு சிறு பிரிவுக்கும் ஒரு படியாக எழுதலாம். இதுபோல் நான்கு அல்லது ஐந்து தாள்களே ஒராண்டுப் படிப்புக்கு வேண்டிய அளவில் ஆயத்தம் செய்து வைத்துக் கொள்ளலாம். அச்சாகி வெளிவரும் புத்தகங்களேவிட இவை குழந்தைகளின் கண்ணேயும் கருத்தையும் கவரும் என்பதற்கு ஐயமில்லை.

இவற்றைத் தவிர வேறு துணைக்கருவிகளையும் ஆசிரியர் ஆயத்தம் செய்து வைத்துக்கொள்ளலாம். குழந்தைகள் வாழும் சூழ்நிலைகளிலுள்ள பொருள்களின் பெயர்கள், செய்கைச் சொற்கள், அறிமுகமான சொற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இவற்றைத் தயாரிக்க வேண்டும். கீழ்க்கண்டவைகளே ஏற்ற சாதனங்களாகக் கருதலாம் :

(i) படங்களும் சொற்களும் உள்ள அட்டைகள் : உறவினர், வீட்டுப் பிராணிகள், பறவைகள், விளையாட்டுப் பொருள்கள், மரம் செடி கொடிகள், வீட்டுப் பொருள்கள், பள்ளிக்கூடப் பொருள்கள், ஊர்தி வகைகள், உடலுறுப் புக்கள் ஆகியவைகளைப் பற்றிக் குழந்தைகளுக்குத் தெரிந்துள்ளவற்றைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றையும் விளக்கும் படங்களைத் தனித்தனியாக வரைந்து ஒவ்வொன்றின்

ホー19