பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$274 தமிழ் பயிற்றும் முறை

கீழும் அதனதன் பெயரைப் பெரிய எழுத்துக்களில் எழுதி அட்டைகளே ஆயத்தம் செய்து கொள்ளவேண்டும். படங்களின் றிச் சொற்கள் மட்டும் எழுதப்பெற்ற அட்டைகளேயும் ஆயத்தம் செய்து கொள்ளவேண்டும். தொடக்க நிலைப்பள்ளிக்கு வந்து சேர்ந்த குழந்தைகளுடன் ஆசிரி. யர்கள் அளவளாவி உணர்வொற்றுமை ஏற்படுத்திக் கொண்டபிறகு இந்த அட்டைகளே க் குழந்தைகளிடம் கொடுத்துப் படிக்கும் பயிற்சியைத் தரலாம் ; ஒருமாத காலம் இப்பயிற்சியை நீட்டிக்கலாம். முதலில் படமும் சொல்லும் சேர்ந்துள்ள அட்டையைக்கொண்டு சொல்லேப் படிக்கச் செய்தும், பிறகு சொல்மாத்திரம் எழுதப்பெற்றுள்ள அட்டையைக் கொண்டு சொல்லே மாத்திரம் நினைவு படுத்திப் படிக்குமாறும் குழந்தைகட்குப் பயிற்சி தரவேண்டும். இவற்றில் நல்ல பயிற்சி ஏற்பட்ட பிறகுதான் அச்சுப் புத்தகங்களைக் கொடுக்கவேண்டும்.

(ii) படங்களையும் பெயர்களையும் இணைத்தல் : குழந்தைகளின் பட்டறிவுக்குட்பட்ட பொருள்களின் படங்களும் அவற்றின் பெயர்களும் தனித்தனியாக எழுதப்பெற்றுள்ள அட்டைகளைத் தயார் செய்யவேண்டும். இந்த அட்டைகளைக் குழந்தைகளிடம் கொடுத்துப் படத்திற்குப் பொருத்தமான பெயரைப் பொறுக்கச் செய்யவேண்டும் ; பெயருக்குப் பொருத்தமான படத்தைப் பொறுக்கவும் தக்க பயிற்சிகளைக் கொடுக்கலாம்.

(iii) முகவரிச் சீட்டுக்கள் : வகுப்பிலுள்ள குழந்தைகளின் பெயர்களேத் தனித்தனியாக அட்டைகளில் எழுதித் தயாரித்துக் கொள்ளவேண்டும். இந்த அட்டைத்துண்டுகளே ஒவ்வொரு குழந்தையிடமும் கொடுத்து அவற்றை உரியவரிடம் கொடுக்கச் செய்யலாம். இதைத் தபால்காரன் விளையாட்டு என்றும் வழங்குவர்.

(ii) சொற்ருெடர் அட்டைகள் : சொற்ருெடர் முறைப்படி படிப்பதற்குப் படங்களும் சொற்ருெடர்களும் கொண்ட