பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 தமிழ் பயிற்றும் முறை

(iii) கதைப் படங்கள் : ஓராண்டில் வகுப்பில் கற்பிக் கக்கூடிய இருபதிற்குக் குறையாத கதைப் படங்களைத் தயார் செய்து வைக்கலாம். ஒவ்வொரு கதைக்கும் நான்கு அல்லது ஆறு பகுதிகளாக விளக்கப்படங்கள் அமைய வேண்டும். ஒவ்வொரு படத்தின் கீழும் ஒன்றிரண்டு சிறிய சொற்ருெடர்கள் கதையை விளக்கும் முறையில் எழுதப் பெறல் வேண்டும்.

(ix) படிப்புத்தாள்கள் : மேலே குறிப்பிட்டபடி குழந்தைகளின் துணைக்கொண்டு ஒரு படத்தை அல்லது கதையைப்பற்றிய பல சொற்கள் அல்லது சொற்ருெடர்களைப் பெரிய தாள்களில் பெரிய எழுத்துக்களில் எழுதித்தொங்கவிட்டு வைக்கலாம். அவற்றைப் புத்தகங்களுக்குப் பதிலாகப் படிப்பதற்குப் பயன்படுத்தலாம்.

(x) தேதிப் பெட்டி : சொற்களும் படங்களும் எழுதிய காகிதச் சுருளேத் தேதிப் பெட்டியில் அமைத்து வைக்கலாம். பெட்டியின் கைப்பிடியைச் சுழற்றும்பொழுது ஒவ்வொரு சொல்லும் படமும் குழந்தைகளுக்குத் தெரியும். அவற்றை அவர்கள் ஆவலுடன் படிப்பர்.

(xi) தனிப் பயிற்சி அட்டைகள் : தனிப் பயிற்சி அட்டைகளைக் கொடுத்துப் படிக்கச் செய்யும்பொழுது வகுப்பை ஆறு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு வகை அட்டைகளைக் கொடுக்கலாம். ஆறு தனிப் பயிற்சி அட்டைகளாவன : (அ) முறை மாற்றி எழுதப்பெற்ற சொற்களைச் சரியான முறையில் அமைத்துச் சொற்ருெடர்களாக்குதல் ; (ஆ) விடுகதைகள் எழுதி அவற்றைப் படித்து விடுவிக்கச் செய்தல் ; (இ) விடை களுக்கு ஏற்ற விளுக்களேயும் விளுக்களுக்கு ஏற்ற விடைகளேயும் பொருத்திக் கண்டுபிடித்தல் ; (ஈ) ஒவ்வொரு வரிசையிலும் அவ்வரிசைக்குப் பொருத்தமில்லாத சொல்ஆலப் படித்து நீக்கிச் சரியாக விலங்குகள், பறவைகள், மரங்கள், ஊர்திகள் முதலிய வகைகளாகப் பிரித்தல் ;