பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு g77

(உ) நேரெதிர்ச் சொற்களையும், ஆண்பாலுக்குப் பெண்பாற் சொற்களையும், ஒருமைக்குப் பன்மைச் சொற்களையும், ஒரு பொருள் குறித்த பல சொற்களையும், பல பொருள் குறித்த ஒரு சொற்களையும் அமைத்தல் ; (ஊ) சரி, தவறு என்ற இருவகைக் கூற்றுக்களையும் அமைத்துச் சரியானவற்றைக் கண்டுபிடிக்கச் செய்தல்.

படித்தலில் திறமை : படித்தல் வாழ்க்கை முழுவதும் பயன்படக் கூடியது. ஆகவே, எல்லா நிலைப் பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் அத்திறனே மாளுக்கர்களிடையே வளர்க்கவேண்டும். மொழியாசிரியர்களேயன்றி எல்லாப்பாட ஆசிரியர்களும் இதில் கருத்தைச் செலுத்திப் பணியாற்ற வேண்டும். எல்லாத் துறைகளிலுமுள்ள சொற்களஞ்சியம் குழந்தைகளிடம் பெருகிளுல்தான் படித்தலில் விரைவும் சுவையும் ஏற்படும் ; அதில் ஒருவித உற்சாகமும் உண்டாகும்.

வாய்விட்டுப் படித்தல், வாய்க்குள் படித்தல் எனப்படிப்பில் இரண்டு நிலைகள் உள்ளன. படித்தலில் திறமை உண்டாகவேண்டுமாயின் இந்த இரண்டு நிலைகளிலும் திறமையை வளர்க்கவேண்டும். வாழ்க்கைக்கு இந்த இரண்டு நிலைப் படிப்பும் வேண்டும். படிப்பில் விரைவை உண்டாக்க வாய்க்குட் படிப்பிற்கு முக்கியத்துவம் அளிக். கப்பெற்றிருக்கின்றதேயன்றி வாய்விட்டுப் படித்தலேஅறவே நீக்கவேண்டும் என்ற பொருளில் அன்று. இந்த இரண்டு நிலப் படிப்பையும் தேவைக்கு ஏற்றவாறு அளவறிந்து பள்ளிகளில் மாணுக்கர்களிடம் வளர்க்கவேண்டும். இன்று பள்ளிகளில் இந்த இரண்டையும் சரியான முறைகளில் வளர்ப்பதில் தக்கவாறு கவனம் செலுத்தப்பெறவில்லை.

6. வாய்விட்டுப் படித்தல்

புத்தகத்திலிருக்கும் எழுத்துக்களைக் கண்ணுல்பார்த்து வாயால் உச்சரித்துச் சொல்லிப் பொருள் உணர்தலேயே