பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 தமிழ் பயிற்றும் முறை

வாய்விட்டுப் படித்தல்', (oral reading) என்கின்ருேம். இச்செயலில் முக்கூறுகள் அடங்கியுள்ளன ; சொற்களைக் கண்ணுற் காணல், உதடு, நாக்கு, அண்ணம், பல் முதலிய ஒலி உறுப்புக்களால் சீர்பட உச்சரித்தல், உள்ளத்தாற் கருத்துணரல் என்பவை அவை. இந்த முக்கூறுகளேயும் வாய்விட்டுப் படிக்கும்பொழுது தெளிவாகக் காணலாம். வாய்விட்டுப் படித்தலில் திறமை உண்டாகவேண்டுமாயின் இந்த மூன்று கூறுகளிலும் தனித்தனியே திறமை உண்டாக வேண்டும் ; தக்க பயிற்சிகளால் இவற்றை நன்கு வளர்க்கலாம். தொடக்கத்தில் வாய்விட்டுப் படித்தலேயே நன்கு. வளர்க்க வேண்டும். வாய்விட்டுப் படித்தலால்தான் குழந்தைகள் படிப்பில் தேவையான அளவு திறமையடைந்துள்ளனரா என்பதைச் சோதிக்கவும் முடியும்.

வாய்விட்டுப் படித்தலின் இன்றியமையாமை : வாய்விட்டுப் படித்தல் இரண்டு காரணங்களுக்காக மேற்கொள்ளப்பெறுகின்றது. முதலாவது : பேசுவதற்கு அது பெருந்துணே புரிகின்றது. புத்தகத்திலிருந்து பேசுவதற்குப் பல சொற்களே எடுத்துக் கொள்ளுகின்ருேம். எடுத்துக்காட்டாக, ஒரு நாடகத்தை நடிப்பதாகக் கொள்வோம். நாடகத்தில் எத்தனைப் பாத்திரங்கள் உள்ளனரோ அத்தனை மானுக்கர்கள் அதில் பங்கு எடுத்துக்கொள்ள நேரிடும். அப்பொழுது, ஒவ்வொருவரும் இயல்பாகப் பேசுவதில் நல்ல பயிற்சியினைப் பெறுவர். அந் நாடகம் நெட்டுருச் செய்யப்பெற்று நடிக்கப்பெறும்பொழுது மாணுக்கர் பெறும் வாய்மொழிப் பயிற்சியின் அளவு அதிகமாகும். நடிப்பதில் உண்டாகும் பழக்கம் வேறு கதைகளை நாடகமாக்கி. நடிக்கவும், எளிய உரையாடல்களை ஆயத்தம் செய்யவும் தூண்டும். இதனுல் இன்னும் நல்ல வாய்மொழிப் பயிற்சி ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டாகும். இரண்டாவது : வாய்க்குட் படித்தலில் செலுத்தப்பெறும் கவனம் வாய்விட்டுப் படித்தலுக்கு நன்மை பயக்கின்றது. வாய்விட்டுப் படித்தலில் பெறும் பயிற்சிக்கு ஏற்றவாறு வாய்க்குட் படித்தலில் நல்ல பலனைக் காணலாம். அதில் பயிற்சி பெறும்