பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு 288

வாய்க்குட் படித்தலின் அவசியம் : இன்றைய உலகில் புத்தகங்களும், கட்டுரைகளும், வெளியீடுகளும், செய்தித் தாள்களும், பிறவும் கடல்போல் பெருகிக் கிடக்கின்றன. * கல்வி கரையில ; கற்பவர் நாள் சில என்பது கணந்தோறும் நினைவுக்கு வந்து கொண்டுள்ளது. கற்றது கைமண்ணளவு: கல்லாதது உலகளவு என்பதை எல்லோரும் உணர்கின்றனர். இவையனைத்தையும் வாய்விட்டுப் படித்துணர்தல் என்பது இயலாத செயல். இதில் முயற்சி, காலச் செலவுகள் உண்டாவதுடன், சோர்வும் ஏற்படும் ; கருத்துணர்தலும் தடைப்படும். படிப்பதன் நோக்கம் கருத்துணர்தலே யாதலின், அதை எளிதில் எய்துவிக்கும் வாய்க்குட் படிப்பே இதற்குப் பெருந்துணே புரிகின்றது ; விரைவும் விரிவும் அமைந்த இவ்வகைப் படிப்பினுல்தான் கருத்துணர்தல் எளிதில் கைவரப்பெறுகின்றது.

மெய்யுணர்வுக் கல்வியிலும் இறைவளுேடு இரண்டறக் கலக்கத் துணைசெய்யும் மோன நிலையிலும் பேச்சு நிலையிலிருந்து பேச்சற்ற ஞானநிலைக்குப் போகும் படிகள் இருப்பதைக் காணலாம்.

' கல்லாலின் புடையமர்ந்து நான்மறைஆ

றங்கமுதல் கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப் பாலாய் எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமல் சொன்ன வரை'

என்ற அடிகளினுல் பிறைசூடிய பிஞ்ஞகன் சனகாதி முனிவர்க்கு ஞான நிலையைப் பேசாமல் குறிப்பித்த செய்தி அறியக் கிடக்கின்றது. மெய்யுணர்வு பெற்ற தாயுமான அடிகளும் கண்மூடி மெளனியாகிச் சும்மா இருக்க ”

  • பரஞ்சோதி முனிவர் : திருவிளையாடல் புராணம்கடவுள் வாழ்த்து-14.