பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு 285。

கான மாணுக்கர்களும் பிற்போக்கான மாணுக்கர்களும் தத்தம் திறமைக்கேற்றவாறு தனித் தனியாகப் படிக்க இதில் வாய்ப்பு உண்டு. இலக்கியச் சுவைகளே உணர்ந்து இன்புற்றுப் படிப்பதுடன், உயிர்நிலைக் கருத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் இதில் வாய்ப்பு உள்ளது. படிப்பில் ஆர்வத்தையும் பற்றையும் உண்டாக்கிப் படிக்கும். பழக்கத்தையும் பாங்குடன் வளர்க்கும். இப் படிப்பு. முன்னிருந்த சொற்களஞ்சியத்தை உறுதி செய்வதுடன் அதைப் பெருக்கவும் துணைபுரிகின்றது.

இதிலுள்ள சில குறைகள் : வாய்க்குட் படித்தலில் குரல்: பயிற்சிக்கும் உச்சரிப்பில் திருத்தம் பெறுவதற்கும் வாய்ப்புக்கள் இல்லை. உச்சரிப்புப் பிழைகளைக் கேட்டறிந்து அவற்றைக் களைய ஆசிரியருக்கு வாய்ப்பு இதில் இல்லை. மொழிப்பாடத்தின் இன்றியமையாத வாய்மொழிப் பயிற்சிக்கு இங்கு இடம் இல்லை. நடித்தல், உரையாடல், பேச்சு, சொற்பொழிவுகள் முதலியவற்றில் பயிற்சி அளிக்க இப் படிப்பு துணை செய்யாது. தனியாக மனத்திற்குள்ளேயே படிப்பதால் செய்யுளேப் படித்து இன்புறுவதற்கும், இடத்திற்கேற்ற, சுவைக்கேற்ற நடையைக் கேட்டு இன்புறுவதற்கும் இங்கு இடம் இல்லை. செய்யுளே ஒப்புவிக்கும். வாய்ப்பை இதல்ை அடையமுடியாது.

விரைவான படிப்பிற்குத் தடையாக இருப்பவை : விரைவான படிப்பிற்குத் தடையாக இருக்கும் காரணங்களேயும் அவற்றின் மூலத்தையும் கண்டறிதல் கடினம். படித்தல் மிகச் சிக்கலான கூறுகளையுடையது ; அக்கூறுகளே அளக்கும் முறைகளும் தெளிவற்றனவாக உள்ளன. கல்வி நிபுணர்களும் உளவியற் கலைஞர்களும் கீழ்க்காண்பன. வற்றை படிப்பிற்குத் தடையாக இருப்பவை என்று கருதுகின்றனர் :

(1) அறிதிறனுக்கும் (Intelligence) படிப்பிற்கும் தொடர்பு இருப்பதாகக் கருதப்பெறுகின்றது. அறிதிறன்