பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£286 தமிழ் பயிற்றும் முறை

ஈவு குறையக் குறைய படிப்பு மெள்ளப் போகும் என்றும் அஃது உயர உயர படிப்பும் விரைவாகச் செல்லும் என்றும், கூறப்படுகின்றது.

(ii) இக்காலத்தில் குழந்தைகளுக்குத் தனித் தனி-யாகக் கற்பிக்கும் வாய்ப்பு இல்லை : ஒரு வகுப்பில் பலருக்குச் சேர்ந்தாற்போல் கற்பிக்கப்படுகின்றது. இதல்ை ஒவ்வொரு குழந்தையின் தேவையை ஆசிரியர் அறிந்துகொள்ள இயலுவதில்லை ; அவர்கட்கு எப் பகுதி விளங்கவில்லை என்பதை அவர் தெரிந்து கொள்ள முடிவதுமில்லை. இதலுைம் படிப்புத் தடைப்படலாம்.

(iii) உடலில் ஏற்பட்டுள்ள சில கோளாறுகளால் படிப்பு தடைபடக்கூடும் என்றும் கருதப்படுகின்றது. கண் களில் சாதாரணமாகக் காணப்படும் துரப்பார்வை, பக்கப் பார்வை, உருட்சிப் பிழை (Astigmatism) நிறக் குருடு {Colour blindness) (3Luir6ïrp @j60) p&56TIrsyjth, G.:5/r5ößI 60)l_â: சதை (Tonsii), மூக்கடைச் சதை (Adenoids) போன்ற சதை வளர்ச்சியால் பேச்சுறுப்புகளில் நேரிடும் கோளாறுகளாலும், காதுகளில் உள்ள குறையாலும் மட்டிலுமே தடை ஏற்படும் என்று கருதலாயினர். அண்மையில் மூளையில் ஏற்படக்கூடிய சில கோளாறுகளாலும் இத் தடை நேரிடலாம் என்று கண்டறிந்துள்ளனர். குழந்தை கருவில் இருக்கும்பொழுது தாய்க்கு ஏற்படும் காய்ச்சலாலும், பிறக்கும்பொழுது மருத்துவக்கருவிகள் கையாளும்படி நேரிட்டால் அவற்ருலும், பிறந்தபிறகு குழ்ந்தைக்கு வரும் காய்ச்சலாலும் மூளேயின் சில பகுதிகள் பாதிக்கப்பெறும் என்று கருதுகின்றனர். இத்தகைய நீக்கக்கூடிய குறைபாடுகளேத் தக்க மருத்துவ முறைகளால் நீக்க வேண்டும்.

(iv) உடலில் ஏற்படும் வேறு சில கோளாறுகளும் படிப்பிற்குத் தடையாக இருக்கலாம் என்று கருதப்பெறுகின்றது. சில குழந்தைகளுக்கு இடக்கை நன்கு செயற்