பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3288 தமிழ் பயிற்றும் முறை

படுகின்றது. குழந்தை வாழ்வில் ஒருவித நோக்கமுமின்றிப் படிப்பைத் தொடங்கினுல் அது வளர்ச்சி பெருது. தவருன முறையில் ஆர்வம் ஊட்டினுலும் கேடு பயக்கும் என்று உளவியற் கலைஞர்கள் கருதுகின்றனர். அதற்குப் பல எடுத்துக்காட்டுக்களையும் தருகின்றனர். ஒரு சிறுவன் படித்துக் கொண்டிருந்தபொழுது அவனேவிட வயதுக் குறைவுள்ள இரண்டு சிறுமிகள் படிப்பில் அவன் செய்த வழுக்களைச் சுட்டி நகையாடியதன் காரணமாக அச்சிறுவன் படிப்பில் வெறுப்பு காட்டினுகும்; ஒரு குழந்தை தானுக மனத்திற்குள் படித்துக்கொண்டிருந்தபொழுது அவனுடைய அன்னே அவனே அழைத்து உரக்கப் படித்துக்காட்ட அதிலிருந்து அக்குழந்தை படிப்பதற்கே மறுத்தாளும். குழந்தைகளின் இயல்புகளேயறிந்து ஆர்வமூட்டினுல்தான் படிப்பில் நல்ல பலனக் காணமுடியும்.

(ix) படித்தலிலுள்ள * 16t) நுட்பத் திறன்கள் (Techniques) கைவரப்பெருமையாலும் அவற்றை விரைவில் கற்றுக்கொள்ள முனையாததாலும் படிப்பில் தடை ஏற்படு கின்றது. கல்வி நிபுணர்கள் படித்தலைப் பாகுபாடு செய்து பல்வேறு நுட்பத் திறன்களைக் கண்டறிந்துள் ளனர். அவற்றுள் ஒரு குழந்தையிடம் இல்லாதனவற்றை எய்துவித்தும், செம்மையுருதிருப்பனவற்றைச் செம்மையுறச் செய்தும், திரிபடைந்துள்ளனவற்றை நேரியனவாக்கி யும் படித்தலில் விரைவை உண்டாக்கலாம்.

(x) பயிற்றும் முறைகளிலுள்ள தவறுகளிலுைம் படிப்பில் தடை ஏற்படக் கூடும். நிலைக்கு மீறிய புத்தகங். களைப் பயன்படுத்தல், உற்சாகமற்ற பொருள்களைக் கற்பித்தல், குழந்தைகளின் இயல்பான ஆர்வத்தைச் சிதைக்கக்கூடிய முறைகளேக் கையாளல், சொல்லிலக். கணத்திலும் பிறவற்றிலும் அவசியமற்றபடி கருத்தைச் செலுத்துதல், தேவையற்ற மொழிப் பயிற்சி தருதல், தொடக்கத்தில் எளிதாகவுள்ள புத்தகங்களைப் பயன் படுத்தாமை, படித்தலில் இடமிருந்து வலமாகப் போக