பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு 289

வேண்டும் என்பன போன்ற வழிகளைக் காட்டாமை போன்ற பல கூறுகள் படிப்பிற்குத் தடையாக உள்ளன என்று கல்வி நிபுணர்கள் கருதுகின்றனர்.

இன்னும் வேறு காரணங்களும் கூறப்படுகின்றன. விழிப்புடனும் கருத்துடனும் பணியாற்றும் ஆசிரியர்கள் இக்குறைகளில் பெரும்பாலானவற்றை எளிதில் காணக்கூடும். குறைபாடுகளின் காரணத்தை அறியக்கூடாவிடினும் குறைபாடுகளேயாவது கட்டாயம் காணமுடியும். தம்மால் களையமுடியாத குறைகளையுடைய குழந்தைகளைத் தக்க நிபுணர்களிடம் அனுப்பி ஆசிரியர் அவற்றைக் களேய வழிதேடலாம்.

வாய்க்குட் படிப்பின் முக்கிய கூறுகள் : வாய்க்குட் படித்தலில் பல முக்கிய கூறுகள் உள்ளன. ஒவ்வொரு கூறிலும் நல்ல திறனே எய்தினுல்தான் இவ்வகைப் படிப்பில் நிறைந்த பயனை எதிர்பார்க்க முடியும். உறுப்புக்களில் அசைவு இல்லாமை, விரைவான கண் நகர்ச்சி, பிற்போக்குகளும் நிறுத்தல்களும் குறைதல், நேர்மையான கண். பாய்ச்சல், நல்ல கண்பார்வை, கருத்துணரும் ஆற்றல், சொற்களஞ்சியப் பெருக்கம் ஆகியவை வாய்க்குட் படிப்பின் முக்கியக் கூறுகளாகும். இக்கூறுகளே இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று, கருத்துணரும் ஆற்றல் ; மற்ருென்று, வேகம். இவ்விரு பிரிவுகளிலும் தக்க கவனம் செலுத்தி அவற்றிற்குரிய பல நுண்ணிய திறன்களை வளர்ப்பதற்கு வேண்டிய பயிற்சிகளைத் தந்தால் வாய்க்குட் படித்தலில் திறன் நல்ல முறையில் வளரும். இவற்றைச் சற்று விரிவாக ஆராய்வோம்.

3. கருத்துணரும் ஆற்றல்

இது வாய்க்குட்படித்தலிலும் வாய்விட்டுப் படித்தலிலும்

முக்கியமாக வேண்டப்படுவது. பள்ளி வாழ்க்கையிலும்

உலக வாழ்க்கையிலும் இது கைவரப்பெறுவதற்காகத்தான்

த-20