பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 தமிழ் பயிற்றும் முறை

பலவித உபாயங்கள் மேற்கொள்ளப் பெறுகின்றன. சுருங்கக் கூறின், படிப்பின் உயிர் நாடி இதுதான். ஒருவர் பேசுவதைக் கவனித்தோ அச்சிட்ட பகுதியைப் படித்தோ அறிந்து கொள்வதுதான் கருத்துணர்தல் என்றும், எல்லோ ரும் அதை அறிவது எளிது என்றும் ஒரெண்ணம் நிலவி வருகின்றது. தார்ன்டைக் என்ற கல்வி நிபுணர் அவ்வாறு கருதுவது தவறு என்று மெய்ப்பித்துக் காட்டியுள்ளார். கருத்துணர்தலில் ஒரு கருத்து அல்லது ஒரு சில கருத்துக்களே மட்டிலும் பொறுக்குவதில் மாத்திரம் மனத்தின் செயல் நின்று விடுவதில்லை ; மிகச் சிக்கலான முறையில் மனம் செயற்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பலர் படித் தால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அதை அறி கின்றனர். அவ்வாறு அறிவது அவர்களின் முன்னேய பட்டறிவு, மனத்தில் பதியும் திறன், படிக்கும்பொழுது மனம் விழிப்புடனிருக்கும் அளவு ஆகிய பல நிலைகளைப் பொறுத் துள்ளது. எனவே, கருத்துணர்தல் என்பது மிகச் சிக்க லான ஒரு திறன் , அஃது எப்பொழுதும்குறைவுடையது ; நிறைவு பெரு தது ; தேர்ந்தெடுக்கும் இயல்புடையது.

படித்தலும் கேட்டலும் வீனை செயல்கள் அல்ல. ஏதாவது ஒரு நோக்கத்தைக் கொண்டுதான் அவை மேற்கொள்ளப் பெறுகின்றன. தார்ன்டைக் என்பார் கருத்துப்படி படித்தல் என்பது சிந்தித்தல். ஒவ்வொருவரும் தாம் தாம் கருதுகின்றபடிதான் படித்தலை மேற்கொள்ளுகின்றனர் ; படிக்கும் முறையும் தேவைக் கேற்ருற்போல் மாறும். எனவே, கருத்துணரும் ஆற்றலும் தேவைக்கேற்ருற். போல் மாறக்கூடியதே. ஒரு கதையின் போக்கை அறியவோ ஒரு குறிப்பிட்ட பிரச்சினையின் முக்கிய கூறினே அறியவோ படித்தல் மேற்கொள்ளப்பெறலாம். சில குறிப்பிட்ட விவரங்களே அறிவதற்கும், ஒரு சில குறிப்புக்களே அறிவதற்கும், ஒரு நூலே மதிப்பிடுவதற்கும், படிக்கும் பகுதியைச் சுருங்கக் கூறுவதற்கும், நினைவாற்றலை வளர்த்தற்கும் ஆகிய இவைபோன்ற பல்வேறு நோக்கங்களுக்காகப் படிப்பு மேற்கொள்ளப்பெறுகின்றது; ஒவ்வொன்றிலும்