பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு 391

நோக்கத்தை யொட்டிக் கருத்துணரும் திறனும் மாறும். இவ்வாறு தேவைக்கேற்றவாறு வெவ்வேறு அளவில் பயன் படக்கூடிய கருத்துணரும் திறனில் மாணுக்கர்கள் நல்ல பயிற்சி அடையவேண்டும்.

கருத்துணரும் திறன் கைவரப்பெற வேண்டுமானுல், குழந்தைகளின் சொற்களஞ்சியம் பெருகவேண்டும். குழந்தைகளின் சொற் களஞ்சியத்தைப் பெருக்கும் வழிகள் பின்னர்க் கூறப்பெறும். சொற்களஞ்சியக் குறைவினல் கருத்துணர்தல் தடைப்படும். குறைவான அறிவுநிலையும் கருத்துணர்தலில் பிற்போக்கு நிலையை விளே விக்கும். பத்திகளையும் சொற்ருெடர்களையும் படிக்கும் நுட்பத் திறன்களின் குறைவினுலும், இடத்திற்கேற்றவாறு சொற்களின் பொருளுணர்தலில் கவனம் செலுத்தாது சொற்களே அறிவதிலேயே முக்கியத்துவம் தருவதனுலும் கருத்துணர்தல் பாதிக்கப்பெறும். கீழ்க் குறிப்பிடப்பெற். றுள்ள உபாயங்களைத் தேவைக் கேற்றவாறு வாய்ப்புக்கள் வருங்கால் கையாண்டு கருத்துணர்தலில் திறமையை வளர்க் கலாம். வகுப்பு முறையில் கற்பித்தலுக்கு இவை யோசனைகளேயன்றி முடிந்த முடிவுகளல்ல.

(1) குழந்தைக்குப் படிக்கக் கொடுக்கப்பெறும் புத்தகங்கள் அவர்களுக்கு ஆர்வமூட்டக்கூடியவைகளாகவும், கருத்தை ஈர்க்க வல்லவைகளாகவும் இருத்தல் இன்றி யமையாதது. அரை நூற்ருண்டிற்கு முன்னதாகக் கதைகளையும் பிறவற்றையும் புத்தகங்கள் மூலமாக மட்டிலுந்தான் அடைய முடிந்தது. இன்று அவற்றை வானுெலி, பேசும் படங்கள் போன்ற பிற சாதனங்களாலும் பெற முடிகின்றது. எனவே, ஆசிரியர்கள் தம்முடைய அறிவுத் திறனேயெல்லாம் பயன்படுத்திப் புத்தகங்களின் மூலம் பல நல்ல செய்திகளைப் பெற முடியும் என்று குழந்தைகட்குத் தெளிவுபடுத்தவேண்டும் , தெளிவு படுத்துவதுடன் நின்று விடாது அதற்கெனத் தனிக் கவனத்தைச் செலுத்திப் பல நல்லபுத்தகங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். மெதுவாகப்