பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 தமிழ் பயிற்றும் முறை

படிப்பவர்களுக்கு உற்சாகம், புதுப்போக்கு, நகைச்சுவைவீரம் முதலிய கருத்தை ஈர்க்கும் பண்புகளடங்கிய செய்திகளைக் கொண்ட புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் வாய்ப்புக்களே நல்கவேண்டும்.

(2) தொடக்கத்திலிருந்தே குழந்தைகளைப் பல்வேறு வகைப் படிப்புக்களில் நன்கு பயிற்ற வேண்டும். இயல் பாகவே குழந்தைகள் கதைகளைப் படிக்க விழைவர். இவற்றைத் தவிர, நாளடைவில் பயன்படும் தகவல்களே. யுடைய நூல்கள், நடைமுறையில் வாழ்க்கையில் பயன் பெறத்தக்க பொருள்களேக் கூறும் நூல்கள், புதினங்கள், பிரயாண நூல்கள், நாடகங்கள், நாட்டு வளங்கள் நகைச்சுவை ஆகியவற்றைத் தரும் நூல்கள், எளிய முறையில் எழுதப்பெற்ற அறிவியல் நூல்கள் முதலியவற்றை யெல்லாம் படிப்பதில் சுவையை எழுப்பிவிடுதல் வேண்டும். இன்றைய நிலையில் தமிழிலும் குழந்தைகளுக்கெனப் பல நல்ல இதழ்கள் வெளிவருவதால், அவை இளம் மாணுக்கர்களுக்குக் கிட்டும்படி செய்தல் வேண்டும். கவர்ச்சிதரும் புத்தகங்களையும் இதழ்களேயும் தேர்ந்தெடுப்பதிலும், பல்வேறு விதமானவற்றைப் பொறுக்கி எடுப்பதிலும்தான் ஆசிரியர்களின் திறமையைக் காணமுடியும் ; علي(;stry 35 - யொட்டிதான் வெற்றியும் அடையமுடியும்.

(3) குழந்தைகளின் தனி ஆர்வத்திற்கேற்றவாறு புத்தகங்களைப் பொறுக்கவேண்டும். ஒவ்வொரு குழந்தைக் கும் ஒவ்வொரு பொருளில் ஆர்வம் இருக்கும். சில குழந்தைகள் விமானங்களே விரும்பலாம் ; சில குழந்தைகள் பயிர்த்தொழில்களை விழையலாம் ; சில குழந்தைகளுக்குக் கைத்தொழில்களில் நாட்டம் செல்லும் ; இன்னும் சிலர் இலக்கியவகை நூல்களில் ஆசை கொள்வர் ; சிலர் அறிவியல் புத்தகங்களை விரும்பக்கூடும். இவற்றைக் குறிக்கும் புத்தகங்களைக் குழந்தைகளின் அறிவு நிலைக்கேற்றவாறு தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கிட்டும்படி செய்தல்வேண்டும். ஆங்கிலத்தில் அருமையான நூல்கள் பல வண்ணப்