பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 தமிழ் பயிற்றும் முறை

தும் வாய்ப்புக்கள் இருந்தால்தான், கருத்துணரும் ஆற்றல் விரைவில் வளர வழி ஏற்படும்.

(5) பள்ளிப் பொது நூலகத்திலும், வகுப்பு நூலகங்களிலும் துணைப்படிப்புக்கென ஏராளமான புத்தகங்களே வாங்கி வைக்கவேண்டும் ; நல்ல நல்ல இதழ்களையும் செய்தித் தாள்களையும் தருவிக்கவேண்டும். அவற்றை அலமாரிகளிலும், படிக்கும் மேசைகளிலும் நல்ல முறையில் பரப்பிவைக்கவேண்டும் ; நூலகத்தில் நல்ல இருக்கை வசதிகளை ஏற்படுத்தவேண்டும். புத்தகங்கள் நூலகத்தில் இருப்பதை அனைவரும் எளிதில் அறியும்படி செய்தல் வேண்டும். புத்தகக் கடையில் கவர்ச்சிதரும் முறையில் புத்தகங்களே அலமாரிகளில் பரப்பி வைத்திருப்பது போன்ற முறைகளே நூலகத்திலும் கையாளலாம் ; நூலகத்திற்குப் புதிதாக வந்துள்ள நூல்களே இவ்வாறு பரப்பிவைக்கலாம். ஏனேய நூல்களுக்குப் பல புத்தகப் பேரேட்டுப் படிகளே (Catalogues) வைத்து நூலகத்தில் இருக்கும் புத்தகங்களே எல்லோரும் அறியும்படி செய்யலாம்.

(6) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கென சில நிகழ்ச்சிககளத் தயார் செய்து அவற்றைச் செயல் முறைக்குக் கொண்டு வரலாம். நேரில் காணவல்ல நாடகங்கள், ஒலி பரப்புமூலம் கேட்கும் நாடகங்கள் போன்றவற்றை நிகழ்ச்சிகளில் புகுத்தலாம் ; படித்த புத்தகங்களைப்பற்றிய திறய்ைவு, சில இசை நிகழ்ச்சிகள், சுற்றுலாபற்றிய ஒரு சில பேச்சுகள் போன்றவற்றை இவற்றில் இடம்பெறச் செய்யலாம். பள்ளி நடைமுறை ஆண்டின் மூன்று பருவங்களிலும் (Terms) பருவம் ஒன்றிற்கு மாலை நேரத்தில் ஒவ்வொரு வாரமும் இந்நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்புக்களை நல்கலாம்.

(7) சிறு குழந்தைகளாக இருந்தால் உரையாடல்கள், கதை சொல்லச் செய்தல் முதலியவற்றிற்கு வாய்ப்பு அளிக்கவேண்டும். கதைப் புத்தகங்களையும் உரையாடல்கள்