பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு $295

அடங்கிய புத்தகங்களையும் மாணுக்கர்களின் நிலைக்கேற்றவாறு தேவையான அளவு நூலகங்களில் வாங்கி வைக்க வேண்டும்.

(8) இளம் மாணுக்கர்கள் படிக்கும் புத்தகங்களில் கடின சொற்களும் பொருள் விளங்காத கருத்துக்களும் அதிகம் இருத்தல் கூடாது. அவை அதிகமாக இருப்பின் கருத்துணர்தல் தடைப்படும் , அவ்வாறு அதிகமாக இருப்பது தெரிந்தால், படிக்கத் தொடங்குவதற்கு முன் ஆசிரியர்கள் அவற்றை விளக்கலாம். இந்தப் புதிய சொற் களும் கருத்துக்களும் பரவலாக இருக்கும்படி எழுதப்பெறவேண்டும் ; அவை ஓரிடத்தில் அதிகமாகச் சேர்ந்திருக்கலாகாது. நூறு சொற்களுக்கு ஐந்து அல்லது ஆறு புதிய சொற்கள் இருக்கலாம். - -

(9) மேல் வகுப்புக்களில் மேற்பார்வைப் படிப்பு, செயல்திட்ட ☾]6ᏡᏰᎠ , தனிப்பயிற்சி முறை ஆகியவற்றின் மூலம் பல புத்தகங்களைப் படிக்கச் செய்யலாம். சில சமயங்களில் படிக்கும் புத்தகங்களில் ஒரு சில விளுக்களே ஆயத்தம் செய்து அவர்கள் கருத்துணரும் ஆற்றலைத் தேறலாம். படிப்பதற்கு ஏராளமான வாய்ப்புக்களைக் கொடுக்கவேண்டுமேயன்றி, படிப்பதில் கட்டாயப் படுத்துவதையோ படித்தவற்றைச் சோதிப்பதையோ குறைத்துக் கொள்ளவேண்டும்.

(10) பாடப் புத்தகங்களிலிருந்து சில எளிய பகுதிகளே வகுப்பில் நடத்துமுன்னரே ஒரோவழி வீட்டில் படித்துக் கொண்டு வரும்படியும் செய்யலாம். இம்முறை தாமாகப் படித்துக் கருத்துணர்வதற்கு ஒரு பயிற்சியாக இருப்பதுடன் தாமாகப் படிப்பதற்குத் துாண்டுகோலாகவும் இருக்கும் ; படிப்பதில் ஆவலையும் உண்டு பண்ணும். அகராதிப்பழக்கம், அபிதான சிந்தாமணி போன்ற மேற் கோள் நூல்களைப் புரட்டும் பழக்கம் ஆகியவற்றை மாணுக்கர்களிடம் உண்டாக்கிவிட்டால் கருத்துணரும் திறன் விரைவில் வளர ஏதுவாகும்.